யாரு இந்த மீனாட்சி தினேஷ்?.. தலைவர் தம்பி தலைமையில் படத்துல தூள் கிளப்பினாங்களே.. 18+ படமும்!
சென்னை: மலையாளத்தில் வெளியான இரட்ட படத்தில் மகளாக நடித்த மீனாட்சி தினேஷுக்கு தற்போது கோலிவுட்டில் ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த காலத்தில் இருந்தே கேரளாவில் இருந்து ஏகப்பட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிக் கொண்டே வருகின்றனர்.
நயன்தாரா, அசின், அனுபமா பரமேஸ்வரன், அனஸ்வரா ராஜன் வரிசையில் அடுத்து மீனாட்சி தினேஷ் கோலிவுட்டில் யங் நடிகையாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

பொங்கலுக்கு வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பதிவு செய்துள்ள ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தில் நடித்து அசத்திய மீனாட்சி தினேஷ் அதற்கு முன்னதாக விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

யாரு இந்த மீனாட்சி தினேஷ்: மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான தரமான சம்பவமான 'இரட்ட' படத்தில் ஜோஜு ஜார்ஜின் மகள் ஸ்வேதாவாக நடித்து மலையாள திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்தார். பிரேமலு, லோகா உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் நஸ்லென் நடித்த 18+ படத்திலும் நடித்து பரபரப்பை கிளப்பிய மீனாட்சி தினேஷ் தான் தற்போது கோலிவுட்டில் பலரும் விரும்பி படங்களில் புக் பண்ணும் இளம் நடிகையாக மாறி வருகிறார்.

லவ் மேரேஜ் முதல் யூத் வரை: விக்ரம் பிரபு நடித்த லவ் மேரேஜ் படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் போல அறிமுகமாகி உள்ளார் மீனாட்சி தினேஷ். இது என்ன மாயம் படத்தில் கீர்த்தி சுரேஷை அறிமுகப்படுத்தியவரும் நம்ம விக்ரம் பிரபு தான். கும்கி படத்தில் லட்சுமி மேனனும் விக்ரம் பிரபுவுடன் நடித்து தான் பிரபலமானார். அந்த வரிசையில் மீனாட்சி தினேஷ் கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருவாரா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். இந்த பொங்கலுக்கு தலைவர் தம்பி தலைமையில் படத்தில் இவர் போட்ட ஆட்டம் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. அடுத்ததாக கென் கருணாஸ் நடிப்பில் உருவாகி வரும் யூத் படத்திலும் இவர் தான் ஜோடி என்பது கூடுதல் தகவல்.
செம அழகு: கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட நடிகைகள் வர காரணமே அவர்களுடைய அழகு தான். மாரி செல்வராஜ் முதல் ஏகப்பட்ட இயக்குநர் கேரள நடிகைகளை தொடர்ந்து தங்கள் படங்களில் நடிக்க வைத்துக் கொண்டே வருகின்றனர். மீனாட்சி தினேஷுக்கு ஃபேவரைட் ஹீரோ சூர்யா தானாம். மமிதா பைஜுவை போல அவரும் சூர்யாவுடன் நடிக்க ரொம்பவே ஆர்வமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











