2 குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும்.. உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த பிரணிதா.. ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்பு!
பெங்களூர்: கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த கன்னட நடிகை பிரணிதா சுபாஷ், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கவர்ச்சி பொங்க பாரீசில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பொறுக்கி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். தமிழில் உதயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி வைத்தார். தெலுங்கில் பவன் கல்யாண் உடன் இணைந்து இவர் நடித்த அட்டாரங்கி தாரேதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்த பிரணிதா சுபாஷ் பாலிவுட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஜ் தி பிரைட் ஆப் இந்தியா திரைப்படத்தில் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் நித்தின் ராஜு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் பிரணிதாவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் அறிமுகம்: திருமணத்துக்கு பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்க்க ஆரம்பித்த பிரணிதா சுபாஷ் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான தங்கமணி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். மேலும் கன்னடத்தில் ராமண அவதாரா படத்திலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஜோதிகா, நயன்தாரா, நஸ்ரியா, பிரியாமணி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்த வரும் நிலையில், பிரணிதாவும் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
பாரீஸ் ஃபேஷன் வீக்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் ஃபேஷன் வீக் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பிரணிதாவும் பங்கேற்றுள்ளார். அதற்காக படு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு அவர் ராம்ப்வாக் செய்துள்ளார். அந்த உடையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.
இரண்டு குழந்தைகள்: திருமணம் முடிந்த கையோடு பிரணிதாவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. 2022 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அர்னா எனும் பெயரை வைத்துள்ளார். அதன் பின்னர் கடந்த ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு ஜெய் எனும் பெயரை வைத்துள்ளார். இந்து மதத்தில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர் ஏகப்பட்ட விரதங்களை கடைபிடிக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சி: திருமணத்துக்குப் பிறகு பக்தி மோடில் இருந்து வந்த பிரணிதாவா இப்படி மீண்டும் உள்ளாடை தெரியும் அளவுக்கு ஓவர்டோஸ் கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துவிட்டார் என ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவுக்கு சில புகைப்படங்களை களமிறக்கி கதிகலங்க செய்துள்ளார். பாரீஸ் ஃபேஷன் வீக்கில் இதெல்லாம் கிளாமரே கிடையாது என்றும் டாப்லெஸ்ஸாக கூட மாடல்கள் ராம்ப்வாக் செய்வார்கள் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மீண்டும் தென்னிந்தியா முழுவதும் பல படங்களில் பிரணிதா சுபாஸ் நடிக்க தயாராகி வருகிறாரா? அல்லது ஹாலிவுட் படங்களுக்கு கொக்கிப் போடுகிறாரா என கேள்விகள் கிளம்பி உள்ளன. பிரணிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











