குத்துச்சண்டை ராணி மேரி கோமாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா
மும்பை: குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தி படத்தில் மேரியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படம் ஒன்றை எடுக்கிறார்.

இந்திய பெண்களை பெருமைபடவைத்த மேரி கோம்
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

படமாகும் மேரி கோம் வாழ்க்கை
பிரபல இந்தி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மேரி கோமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கிறார். இதற்கான வேலைகளை அவர் மேரி ஒலிம்பிக் போட்டிகளுக்கு போகும் முன்பே தொடங்கிவிட்டார்.

மேரி கோமாக பிரியங்கா
சாதனை மங்கை மேரி கோமாக படத்தில் நடிக்கப் போவது பிரியங்கா சோப்ரா. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

மேரியிடம் பயிற்சி பெறும் பிரியங்கா
இந்த படத்தில் நடிக்க பிரியங்கா மேரி கோமை சந்தித்து அவரிடம் பயிற்சி பெறவிருக்கிறார். பேஷன், 7 கூன் மாஃப் போன்ற படங்களில் கலக்கிய பிரியங்கா இதிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











