62 வயதாகும் மாதவி.. அவரோட அழகான மகளை பார்த்து இருக்கீங்களா.. இன்னைக்கு பிறந்தநாளாம்.. வாவ்!

சென்னை: ராஜ பார்வை, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் 80களில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை மாதவி. 62 வயதாகும் நடிகை மாதவி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக ஆரம்பித்தார். இந்நிலையில், இன்று தனது மகள் டிஃபானி கெளரிகாவின் பிறந்தநாள் என அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் மாதவி ஷேர் செய்துள்ளார்.

அம்மாவை விட அப்படியொரு அழகில் மாதவியின் மகள் டிஃபானி கெளரிகா இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவரும் ஹீரோயினாக நடிக்கலாமே என்றும் அம்மாவை போலவே க்யூட்டாக இருக்காங்க என்று வர்ணித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

madhavi madhavi daughter heroine

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த மாதவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என அப்போதே பான் இந்தியா நடிகையாகத்தான் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லு முல்லு: புதிய தோரணங்கள் படத்தின் மூலம் 1979ம் ஆண்டு தமிழில் நடிக்க வந்தவர் தான் மாதவி. வீரப்பெண், எங்க ஊரு கண்ணகி, சிவாஜி கணேசனின் அமரகாவியம் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், ரஜினிகாந்த் உடன் தில்லு முல்லு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார்.

காதலின் தீபம் ஒன்று: கமல்ஹாசன் உடன் டிக் டிக் டிக் படத்தில் கவர்ச்சிப்புயலாக நடித்த நடிகை மாதவி ரஜினிகாந்த் உடன் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் திமிர் பிடித்த பணக்கார வீட்டுப் பெண்ணாகவும் பின்னர் ரஜினிகாந்தின் காதலில் விழுந்த பின்னர் காதல் தேவதையாகவும் நடித்திருப்பார். ரஜினிகாந்த் அவரது காதலுக்காக உருகி “காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்” என பாடிய பாட்டு இன்றளவும் காதலர்கள் மத்தியில் ஃபேவரைட் பாடலாகவே உள்ளது.

மாதவியின் மூன்று மகள்கள்: நிரபராதி, காக்கி சட்டை, விடுதலை மற்றும் அதிசய பிறவி உள்ளிட்ட படங்களில் நடித்த மாதவி அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை. 1996ம் ஆண்டு ரால்ப் ஷர்மா எனும் அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். நடிகை மாதவிக்கு எவலின் ஷர்மா, டிஃபானி கெளரிகா ஷரிமா மற்றும் பிரிசில்லா ஷர்மா என 3 மகள்கள் உள்ளனர். மாதவியின் நிஜப் பெயர் கனக விஜயலட்சுமி.

மாதவி மகளுக்கு பிறந்தநாள்: நடிகை மாதவியின் மகள் டிஃபானி கெளரிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது புகைப்படங்களையும் அழகாக சுற்றி ரசிகர்களை கவரும் விதமாக உள்ள வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதவி வெளியிட்டுள்ளார். மேலும், உன்னை என் கைகளில் குழந்தையாக வாங்கிய அந்த நாளை என்றுமே மறக்கமாட்டேன். அதற்குள் இப்படி வளர்ந்து விட்டாயே என் செல்லமே என பதிவிட்டு தனது பாச மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மாதவி.

ரசிகர்கள் வாழ்த்து: நடிகை மாதவியின் மகளா இவர் இப்படி அழகா இருக்கிறாரே என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். மாதவியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். சீக்கிரமே சினிமாவில் நடிப்பாரா என்கிற கேள்விகளும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X