வெண்பனி மலரா ஸ்டைலிஷ் தமிழச்சியா... அழகில் அள்ளும் மேகா ஆகாஷ்!
சென்னை : எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் சல்மான்கானின் ராதே படத்தில் நடித்து அங்கு மிகப் பிரபலமாக உள்ளார் நடிகை மேகா ஆகாஷ்.
தமிழில் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் இருக்க அரை டஜன் தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள இவர் இப்பொழுது வெள்ளைத் தீமில் எடுத்த க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

வெளியாகி ஹிட்
க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் ஆரவாரமில்லாத அமைதியான நடிப்பு என தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மேகா ஆகாஷ் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து அங்கும் மிக பிரபலமான நடிகையாக உள்ளார். சூப்பர் ஸ்டாரின் பேட்டை படத்தில் கல்லூரி மாணவியாக அசத்தி இருந்தவருக்கு அடுத்தடுத்து பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் நீண்ட நாளாக வெளிவராமலிருந்த ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன.

அக்டோபர் 31 லேடீஸ் நைட்
தமிழை விடவும் தெலுங்கில் இவர் மிகப் பிரபலமாக இருப்பதால் கையில் அரை டஜன் படங்களில் இப்போது ஒப்பந்தமாகி உள்ளார். அதில் மனு சரித்திரா இப்பொழுது முடிவடையும் தருவாயில் உள்ளது . குர்த்துண்டா சீதாகலம், டியர் மேகா, ராஜராஜ சோர் மற்றும் அக்டோபர் 31 லேடீஸ் நைட் போன்ற படங்களில் தெலுங்கில் நடித்து வருகிறார்.
Recommended Video

கலக்கு கலக்கு
தென்னிந்தியாவைத் தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருக்கும் பிரபுதேவாவின் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராதே திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருந்த மேகா ஆகாஷ்-க்கு இப்பொழுது பாலிவுட்டிலும் வாய்ப்புகள் எக்கச்சக்கமாக வந்து கொண்டுள்ளது. விரைவில் பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்க உள்ளார்.

ஸ்டைலிஷ் தமிழச்சி
தமிழில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகிவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மிக விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வெள்ளை தீமில் க்யூட்டாக எடுத்த கேஷுவல் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க வெண்பனி மலரா இல்ல ஸ்டைலிஷ் தமிழச்சியா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











