Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹன்சிகாவை அடுத்து ஹேக்கர்களால் பாதிக்கப்பட்ட சிம்பு ஹீரோயின்
Recommended Video
சென்னை: நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ரசிகர்களை கவர்ந்தார் மேகா ஆகாஷ். அவர் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவரை ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள்.
மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்து ரஷ்ய டிஜே டம்லா என்று பெயரை மாற்றியுள்ளனர். மேலும் மேகா வெளியிட்டிருந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு டம்லாவின் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளனர்.
|
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து அதில் உள்ளவற்றை கண்டுகொள்ள வேண்டாம். கணக்கை திரும்பப் பெறும் முயற்சியில் என் குழு ஈடுபட்டுள்ளது. விரைவில் மீட்கப்படும் என்று மேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஹன்சிகா
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹன்சிகாவின் போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் மேகா ஆகாஷும் ஹேக்கர்ஸின் சேட்டையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஃபேஸ்புக்
மேகாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு மட்டுமே ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நடிகைகளின் செல்போன்கள், சமூக வலைதள கணக்குகள் அடிக்கடி ஹேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.