Megha Akash :மேகா ஆகாஷ் திருமணம்.. அவங்க அம்மா என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை :நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவர் பிரபல அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்யவுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.
சினிமாவில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே மேகா நடித்துள்ளார். இதனால் அவரது திருமணம் குறித்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேகாவின் திருமணம் குறித்த வதந்தியை மறுத்த அவரது அம்மா : என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் மேகா ஆகாஷ். இந்தப் படத்தில் தனுஷுடன் அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது. ரசிகர்களின் பாராட்டுக்களும் அதிகளவில் கிடைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் சிம்ரன் மகளாக நடித்திருந்தார். தொடர்ந்து சிம்புவுடன் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்திலும் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்திருந்தார்.
இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது தெலுங்கு, இந்திப் படங்களிலும் கமிட்டாகி மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். தமிழிலும் அதர்வாவுடன் பூமராங், விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மேகா ஆகாஷிற்கும் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த திருமண ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் இணைந்து ரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. விரைவில் இதுகுறித்து மேகா அறிவிப்பார் என்றும் திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பாரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என்று மேகா ஆகாஷின் அம்மா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் யாரோ இதுகுறித்து தகவலை பரப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவிற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் மேகாவிற்கு திருமணம் நிச்சயத்தால் அதை தாங்களே முறைப்படி அறிவிப்போம் என்றும் மேகாவின் அம்மா அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆன்டணியுடன் இணைந்து நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். இதை தவிர்த்து தெலுங்குப் படங்களிலும் அவர் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு திருமணம் என்ற தகவல், அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் குறிப்பிட்டு சொல்லும் படியான படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ், தொடர்ந்து முன்னணி ஹரோக்களுடனும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு திருமணம் என்ற செய்தி அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது படங்களின் ரிலீஸ்போது கூட இத்தனை போன் கால்கள் வந்ததில்லை என்றும் மேகாவிற்கு திருமணம் என்ற தகவலை கேட்டு அதிகமானோர் போன் செய்துவருவதாகவும் அவரது அம்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











