துளிக்கூட மேக்கப் இல்லாமல் சேலையில் மனதை வருடும் மேகா ஆகாஷ்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.

தமிழ் தெலுங்கு என கலக்கிக் கொண்டிருந்த இவர் ராதே படத்தின் மூலம் ஹிந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்தார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் இப்பொழுது துளிகூட மேக்கப் இல்லாமல் சேலையில் மனதை வருடும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில்

கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் தெலுங்கில் பிரபலமான நடிகையாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இப்பொழுது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

கால் தடத்தைப் பதித்தார்

கால் தடத்தைப் பதித்தார்

பேட்ட வெற்றியை தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா ஒரு பக்க கதை, குட்டி ஸ்டோரி ஆகிய படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில் பிரபுதேவா சல்மான்கான் மீண்டும் கூட்டணி அமைத்த ராதே படத்தில் நடித்து இந்தி பட உலகிலும் கால் தடத்தைப் பதித்தார்.

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக

இப்பொழுது விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வருகிறார். மனு ஷரித்ரா, அக்டோபர் 31 லேடீஸ் நைட் ஆகிய படங்களிலும் மேகா ஆகாஷ் பிஸியாக நடித்து வருகிறார். இதில் அக்டோபர் 31 லேடீஸ் நைட் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிறது.

Recommended Video

விஜய் கூட DANCE ஆட முடியாது | ACTRESS MEGHA AKASH CHAT PART - 02 | Filmibeat Tamil
துளிகூட மேக்கப் இல்லாமல்

துளிகூட மேக்கப் இல்லாமல்

இவ்வாறு ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் இப்பொழுது துளிகூட மேக்கப் இல்லாமல் சேலையில் மனதை வருடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X