இப்படியெல்லாம் கூடவா செல்பி எடுப்பாங்க .. போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை
லக்னோ : பாலிவுட் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருபவர் மேகா குப்தா. இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் கை தேர்ந்தவராக இருந்து வருகிறார்.
இவர் தற்போது அனைவரும் வியக்கும் வகையில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் செல்பியை இப்படி கூட எடுக்கலாமா என அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர்.
இவ்வாறு கவர்ச்சியும் செல்பியும் இணைந்த அந்த புகைப்படத்திற்கு தங்களது அன்பை லைக்குகளின் மூலம் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் கூட்டம்
மாடல் அழகியாக இருந்து பின் காவியாஞ்சலி, கும்கும் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மேகா குப்தா. நடிப்பை போன்று கவர்ச்சிக்கும் சிறிதும் பாகுபாடு காட்டாத இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இப்படி கவர்ச்சி கடலில் தன்னைப் பின் தொடர்பவர்களையும் ரசிகர்களையும் நனைய விட்டு வந்த இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

பாயல்
தொலைக்காட்சித் தொடர்களில் தனது கொடியை நட்டு வந்த மேகா குப்தா 2006ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த ஃபேன் என்ற படத்தில் பாயல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பாலிவுட் திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்தார். சிரிப்பால் அனைவரையும் மயக்கினார் .

ப்ராஸ்டிட்யூட்
பல தொலைக்காட்சி தொடர்களில் ஒரு சில படங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது "பிரைப்" என்ற வெப் சீரியஸில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இதில் இதுவரை நடிக்காத கதாபாத்திரமான ப்ராஸ்டிட்யூட் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கும் இவர் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்று வருகிறார்.

கிளாமர்
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய படங்களை பதிவேற்றி வருகிறார். ஒவ்வொரு போட்டோக்களிலும் எந்த அளவு கிளாமர் காட்ட முடியுமோ அந்தளவுக்கு காட்டி தன் ரசிகர்களை எப்போதும் குஷியில் வைத்திருப்பார். இந்நிலையில் தற்போது இவர் வித்தியாசமான ஒரு செல்பி எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

குட்டை டிரவுசருடன்
யோகா உடற்பயிற்சியில் கைதேர்ந்தவரான இவர் இந்த போட்டோவில் நைட் ட்ரெஸ்ஸில் குட்டை டிரவுசருடன் தனது பளபளக்கும் கால்களில் ஒரு காலை மட்டும் மேலே தூக்கியபடி, நாக்கை துருத்திக்கொண்டு சிறிது வெளியே நீட்டியபடி செல்பி எடுப்பது போன்று ஒரு போட்டோவை வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இப்படி கூடவா செல்பி எடுக்கலாம் என கேட்க நினைக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடவே மாட்டார்கள்
இப்படி ஒரு அட்டகாசமான போட்டோவை பதிவிட்டு அதன் கீழ் உங்களுக்கு புத்திமதி கூறும் பெஸ்டி என்று யாராவது இருந்தால் கையை தூக்குங்கள், ஆனால் நீங்கள் செய்த தவறை திரும்பவும் செய்யுங்கள் அவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்வதை விடவே மாட்டார்கள். அது போன்ற அறிவுரைகளை நான் தற்போது நிறைய பேர்களிடம் பெற்றுள்ளேன். அதே போல் நீங்களும் பெற்றுள்ளீர்கள் என்றால் உங்களது கையை தூக்குங்கள், முடிந்தால் என்னை போன்று காலை தூக்குங்கள். என மேகா பதிவிட்ட அந்த பதிவிற்கு பலரும் பதிலளித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











