சிரஞ்சீவி சர்ஜா மகன் எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க.. அம்மா மேக்னா ராஜ் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
பெங்களூர்: கன்னட திரையுலகில் இளம் வயதிலேயே பிரபலங்கள் மறைவது ரசிகர்களையும் திரைத்துறையையும் குறிப்பாக அவர்களது குடும்பத்தை ரொம்பவே பாதித்து வருகிறது. அப்பு என செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமாரின் மறைவு ரசிகர்களை பாடாய்ப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு முன்பாக உயிரிழந்த சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் இன்னமும் ஆறாத காயமாகவே உள்ளது.

காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த மேக்னா ராஜ் கன்னட நடிகரும் அர்ஜுனின் மருமகனுமான சிரஞ்சீவி சர்ஜாவை திருமணம் செய்துக் கொண்டு செம ஹேப்பியாக வாழ்ந்து வந்தார். ஆனால், திடீரென கடந்த 2020ம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.

வயிற்றில் கருவை சுமந்துக் கொண்டு இருக்கும் போது திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், குழந்தை பிறப்பதற்கு முன்னதாக கணவர் உயிரிழந்த வலியை மேக்னா ராஜ் கடந்து வந்ததே பெரிய விஷயம் எனக்கூறுகின்றனர். தனது மகனுக்காகவே வாழ்ந்து வரும் மேக்னா ராஜ் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகனுடன் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகை மேக்னா ராஜ்: தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் ராஜன் கன்னட திரையுலகில் 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மகளான மேக்னா ராஜ் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். 10 ஆண்டுகள் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். 2020ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி கணவர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த மேக்னா ராஜ் மகனுக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: அப்படியே அப்பாவை உரித்து வைத்தது போல வளர்ந்து வரும் ராயன் ராஜ் சர்ஜாவுடன் இணைந்து இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை மேக்னா ராஜ் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 4 வயசுதான் ஆகுது. அதற்குள் மகன் இப்படி வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கணவரின் மறைவுக்கு பிறகு 2 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த மேக்னா 2022ம் ஆண்டு செல்ஃபி மம்மி கூகுள் டாடி படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு தத்பவ எனும் படமும் அவர் நடிப்பில் வெளியானது. இன்னும் ஒரு படமும் ரிலீஸுக்கு ரெடியாக காத்திருக்கிறது.



Click it and Unblock the Notifications











