மேக்னாவின் ஜில் ஜில் சந்திரிகா!

By Staff

முழு நீளக் கவர்ச்சியில் துள்ளி விளையாடும் திரில்லர் படம் ஒன்றில் மேக்னா நாயுடு திறமை காட்டவுள்ளார்.

வீராசாமி மூலம் தமிழுக்கு வந்தவர் மேக்னா நாயுடு. முதல் படம் படத்தின் தயாரிப்பு படு இழுவையாகி விட்டதால், மேக்னாவின் விசிட் தமிழ்த் திரையுலகில் முழு வீச்சில் இல்லாமல் போய் விட்டது.

வீராசாமி முடிவதற்குள் இந்திப் படங்களில் படு பிசியாக சில படங்களை முடித்து விட்டார் மேக்னா. தற்போது சரத்குமாரின் வைத்தீஸ்வரன் படத்தில் தித்திக்கும் கவர்ச்சியைக் காட்டி நடித்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் படு கிளாமரான வேடத்தில், சந்திரிகா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் மேக்னா. மலையாள இயக்குநர் ஷார்வி என்பவர் இயக்கும் படம் சந்திரிகா.

இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சப்ஜெக்ட்டாம். படம் முழுக்க மேக்னா கிளாமராக வருகிறாராம். துணிச்சல் மிக்கப் பெண்ணாக இந்தப் படத்தில் மேக்னாவின் கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.

மேக்னா கிளாமராக நடித்தாலும் கூட இது திரில்லர் கதையாம். ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரைக் கொட்டி நடித்துள்ளார் மேக்னா. இவர் தவிர இன்னொரு இளம்ஜோடியும் படத்தில் இருக்கிறதாம். அவர்களுக்கும் கிளாமர் காட்சிகள் நீக்கமற தரப்பட்டிருக்கிறதாம்.

ஆகஸ்ட்டில் படத்தைத் தொடங்கி நவம்பரில் முடிக்கிறார்களாம். தீபாவளிக்கு மேக்னாவின் தித்திப்புக் கவர்ச்சியுடன் சந்திரிகா தரிசனம் செய்ய வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X