’வீராசாமி’ மேக்னா நாயுடுவை ஞாபகமிருக்கா?.. இந்த வயசுல எப்படி இருக்காரு பாருங்க.. பட்டாயாவில் ஜாலி!
சென்னை: சிம்பு நடித்த சரவணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேக்னா நாயுடு. டி. ராஜேந்தரின் வீராசாமி படத்தில் மும்தாஜ் உடன் இணைந்து நடித்திருப்பார். பிரசாந்தின் ஜாம்பவான், சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன், தனுஷ் நடித்த குட்டி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார்.
1999 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம சாக்ஷி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மேக்னா நாயுடு. தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மேக்னா நாயுடுவுக்கு தற்போது 43 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்காமல் வங்காளம் மற்றும் மராத்தி மொழிகளில் இவர் நடித்து வருகிறார். இந்த சம்மருக்கு தாய்லாந்தில் உள்ள பட்டாயாவுக்கு சென்றுள்ள மேக்னா நாயுடு அங்கு எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
யார் இந்த மேக்னா நாயுடு?: "கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம்" என தனுஷின் குட்டி படத்தில் ஜாக்கெட் அணியாமல் சேலை அணிந்து கொண்டு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தவர் தான் மேக்னா நாயுடு. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு, ஜோதிகா நடித்த சரவணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். டி. ராஜேந்தர் நடித்த வீராசாமி படத்தில் நடித்து பிரபலமானார்.

5 நடிகைகள் நடித்த படம்: வரிசையாக பல படங்கள் நடித்து வந்த மேக்னா நாயுடு ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்த நிலையில் நமிதா, கிரண், கீர்த்தி சாவ்லா, ஷிவானி குரோவர் உள்ளிட்ட நடிகைகளுடன் இணைந்து மேக்னா நாயுடுவும் கவர்ச்சி பொங்க இளமை ஊஞ்சல் படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அவர் பெரிதாக நடிக்கவே இல்லை.

பட்டாயாவில் படுத்துக்கொண்டு: கடந்த 2019 ஆம் ஆண்டு சித்தாரா என்னும் வங்காள படத்தில் நடித்த மேக்னா நாயுடு இந்த ஆண்டு சூர் லகு டே எனும் மராத்தி படத்தில் நடித்துள்ளார். கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் மேக்னா நாயுடு தற்போது தனது விடுமுறையை கொண்டாட தாய்லாந்தில் உள்ள பட்டாயாவுக்கு சென்றுள்ளார். அங்கே படுத்துக் கொண்டு டாப் ஆங்கிளில் கிளாமர் போஸ் கொடுத்து அனைவரையும் கலங்கடித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











