twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேக்னா நடிக்கும் 'நந்தா - நந்திதா'

    By Staff
    |

    Megna
    சூப்பர் டீம் சினிமாஸின் முதல் படைப்பாக மலர்கிறது நந்தா- நந்திதா எனும் புதிய திரைப்படம்.

    தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் ஒரு நாயகியாக நடித்த மேக்னா ராஜ் இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே தெலுங்கில் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த சூப்பர் ஹிட் படத்திலும் இவரே நாயகி. கன்னடப் படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

    கவிதாலயா தயாரிக்கும் கிருஷ்ணலீலை படத்திலும் இவரே நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

    மேக்னாவுடன் முன்னணி நடிகர் நடிகைகள் நந்தா-நந்திதாவில் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்தின் கதையை அஜய்குமார் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் இயக்கம் இராமஷிவா.

    வாலி, கபிலன், சினேகன், அஜந்தா பாடல்கள் எழுத, பிரபல கன்னட இசையமைப்பாளர் எமில் இசையமைக்கிறார்.

    ஒளிப்பதிவு: ஸ்ரீஸ்ரீசீனிவாச ரெட்டி. மக்கள் தொடர்பு ஏ ஜான்.

    எம் கோவிந்தராஜ், எம் நாகராஜ், ஜி பூபால் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் தைத் திருநாளில் பூஜையுடன் ஆரம்பமானது. வரும் சித்திரைத் திருநாளில் வெளியாகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X