பட்டாஸ் படத்தின் பட்டர்ஃபிளை இவங்கதான்.. வைரலாகும் மெஹ்ரின் பிர்ஸடாவின் க்யூட் போட்டோ!
சென்னை: பட்டாஸ் நடிகை மெஹ்ரின் பிர்ஸடா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் டபுள் ஆக்ஷனில் கலக்கவுள்ள பட்டாஸ் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி திரைக்கு வருகிறது.
அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை மெஹ்ரின் பிர்ஸடா நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களை கவர, தனது க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வசீகரித்து வருகிறார்.
பட்டாஸ் பட்டர்ஃபிளை
டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள இந்த பட்டாஸ் பட்டர்ஃபிளைக்கு வெறும் 24 வயது தான் ஆகிறது. பட்டாஸ் படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஸடா நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான பட்டாஸ் பட பாடல்களின் லிரிக் வீடியோவில் மெஹ்ரினின் அழகை பார்த்து தனுஷ் ரசிகர்கள் மெய்மறந்து போயுள்ளனர்.
தனுஷ் ரசிகர்கள் வெயிட்டிங்
மெஹ்ரின் பிர்ஸடா தற்போது வெளியிட்டுள்ள தனது மில்க் ப்யூட்டி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், க்யூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், பட்டாஸ் படத்தில் உங்களின் நடிப்பை காண வெயிட்டிங் என்றும் கூறி வருகின்றனர்.
அழகா இருக்கீங்க
அழகாவும் ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கீங்க மெஹ்ரீன் என இந்த ரசிகர் வர்ணித்துள்ளார்.
செம்ம க்யூட்
நீங்க ரொம்ப செம்ம க்யூட்டா இருக்கீங்க என தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சில ரசிகர்கள் கவிதைகளையும் பட்டாஸ் பட பாடல்களையும் பாடி வருகின்றனர்.
கார்ஜியஸ் குயின்
டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி ஆகியுள்ள மெஹ்ரின் பிர்ஸடாவின் புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர் கார்ஜியஸ் குயின் என வர்ணித்துள்ளார்.
ஜிகிடி கில்லாடி
பட்டாஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிகிடி கில்லாடி படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பாடலில், மெஹ்ரின் பிர்ஸடா கொடுத்துள்ள க்யூட் ரியாக்ஷன்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











