கல்யாணத்தை நிறுத்திய தனுஷ் பட நடிகை.. மீண்டும் சினிமாவில் ரீ என் ட்ரி.. அதுவும் ஜெயிலர் பட நடிகருடன்!
சென்னை: ஹரியானாவின் 6வது முதலமைச்சராக இருந்த பஜன் லாலின் பேரனான பாவ்யா பிஷ்னாய் உடன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்து நிச்சயதார்த்தம் எல்லாம் செய்துக் கொண்ட பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா நடித்துள்ள தமிழ் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகனாக நடித்து கிளைமேக்ஸில் வில்லனாக மிரட்டிய நடிகர் வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள இந்திரா திரைப்படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு ரீ என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா.

நிச்சயதார்த்த விழாவே பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் உள்ளுக்குள் என்ன பிரச்சனையோ தெரியவில்லை, தனது திருமணத்தை அதிரடியாக நிறுத்திவிட்டார். ஆனால், அதன் பின்னரும் இவர் படங்களில் நடிப்பது போன்ற எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்த நிலையில், அவர் நடித்த படம் இந்த மாதம் வெளியாகிறது.
யாரு இந்த மெஹ்ரீன் பிர்ஸடா?: பஞ்சாபி பெண்ணான மெஹ்ரீன் பிர்ஸடா மாடலிங்கில் ஆர்வம் செலுத்தி வந்த நிலையில், தெலுங்கில் 2016ல் வெளியான "கிருஷ்ணகாடி வீர பிரேம கதா" எனும் நானி நடித்த படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மெஹ்ரீன் பிர்ஸடா விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். தனுஷ் நடித்த பட்டாஸ் படம் 2020ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர், தமிழில் இவர் நடிக்கவே இல்லை.
திருமணத்தை நிறுத்திய நடிகை: தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த மெஹ்ரீன் பிர்ஸடா ஹரியானாவின் மறைந்த முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாயின் மகன் பாவ்யா பிஷ்னாயை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். இருவருக்கும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவுக்கு செம ரொமாண்டிக்காக வெளியானது. நிச்சயதார்த்தம் ஆகி 4 மாதத்துக்குள் திருமணம் ஆவதற்கு முன்பாக பாவ்யா பிஷ்னாஐ திருமணத்தை நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வசந்த் ரவி படத்தில்: பட்டாஸ் படத்துக்குப் பிறகு தமிழில் எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த மெஹ்ரீன் பிர்ஸடா தெலுங்கிலும் 2023ம் ஆண்டுக்கு மேல் நடிப்பை நிறுத்தி வைத்தார். இந்நிலையில், 2023ம் ஆண்டே வெளியாக வேண்டிய வசந்த் ரவியின் இந்திரா திரைப்படம் 2 ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு இந்த மாதம் 22ம் தேதி திரைக்கு வருகிறது. அதில், வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸடா நடித்துள்ளார். சபரிஷ் நந்தா இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் படமாக உருவாகியுள்ள இந்திரா படத்தில் வில்லனாக சுனில் நடித்துள்ளார். அனிகா சுரேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதன் இன்ட்ரெஸ்டிங்கான டிரைலர் வைரலாகி வருகிறது. பட்டாஸ் ஹீரோயினை மீண்டும் பார்த்த நிலையில், கோலிவுட் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











