இப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு!

Recommended Video

ஜோதிகாவின் துணிச்சல் பேச்சு | Jyothika Speech at Ratchasi Press Meet

சென்னை: ஒரு அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக திருப்தியாக இருக்கிறேன் என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், கவுதம்ராஜ் இயக்கியுள்ள படம் ராட்சசி. ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜூலை 5ம் தேதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோதிகா, இப்போது தான் தனது வாழ்வில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருப்பதாகக் கூறினார்.

வித்தியாசமான காட்சிகள்

வித்தியாசமான காட்சிகள்

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியும் புதிதாக இருக்கும். ஒருவர் வசனம் பேசும் போது, எதிரில் இருப்பவரின் ரியாக்ஷ்ன் தான் பிரேமில் இருக்கும். இதுபோல் நிறைய புதுமைகளை இயக்குனர் கவுதம்ராஜ் செய்துள்ளார். அவருடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

பூர்ணிமா பாக்யராஜ்

பூர்ணிமா பாக்யராஜ்

இந்த படத்தில் என்னுடன் பூர்ணிமா பாக்யராஜ் நடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த நடிகை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் அவரும் நானும் இடம்பெறும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

உண்மையான ஆசிரியர்கள்

உண்மையான ஆசிரியர்கள்

உண்மையான ஆசிரியர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் நடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஏனென்றால், அந்த கதாபாத்திரமாகவே அவர்கள் காட்சியளிக்கிறார்கள். எனவே அவர்களுடன் போட்டி போட்டு நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை தத்துவம்

என் பொண்ணு படிக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியர் கூறிய சில வார்த்தைகளை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஒருவர் மலை மீது ஏறி உச்சிக்கு சென்று மற்றவர்கள் கீழே இருப்பதை பார்ப்பது தான் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அதுவே சாதனை அல்ல. நாம் மலை ஏறும் போது மற்றவர்களையும் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு செல்வது, அந்த பயணத்தை சந்தோஷமானதாக்கும். அதுதான் உண்மையான வெற்றி.

ஆசிரியரின் வார்த்தைகள்

ஆசிரியரின் வார்த்தைகள்

அவர் சொன்ன இந்த வார்த்தைகளை நான் எனது வாழ்க்கையில் பயன்படுத்துகிறேன். இன்றும் ஒரு ஆசிரியரின் வார்த்தை மிக முக்கியமானது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் நம் வாழ்க்கை திருப்தியாக இருக்கும்.

இரண்டாவது சுற்று

இரண்டாவது சுற்று

என்னுடைய இந்த இரண்டாவது சுற்றில் இந்த கொள்கையைத் தான் பின்பற்றுகிறேன். எனவே தான் எனக்கு நிறைய நல்ல கதைகள் வருகிறது. அதில் இருந்து தான் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆண்களை இந்த பயணத்தில் தான் சந்திக்கிறேன். ஒரு அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக நான் திருப்தியாக உள்ளேன். இது தான் எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக நான் உணர்கிறேன்" என ஜோதிகா கூறினார்.

More from Filmibeat

Read more about: jyothika ஜோதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X