Keerthy Suresh - கீர்த்தி சுரேஷ் லிமிட்டை க்ராஸ் செய்யமாட்டார்.. அதெல்லாம் சாதாரணம்.. தாய் அளித்த விளக்கம்
சென்னை: கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ரகுதாத்தா படத்தின் ப்ரோமோ நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது. நகைச்சுவை ஜானரில் உருவாகியிருக்கும் அப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பதாக ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் ஃப்ளாப் ஆனாலும் கீர்த்தி சுரேஷ் மீதான க்ரேஸ் ரசிகர்களிடம் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னணி நடிகை: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட அவர் வரிசையாக படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் தனது கவனத்தை திருப்பிய அவர் மகாநடி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தேசிய விருது வென்ற பிறகு யார் கண் பட்டதோ சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதனையும் சமாளித்திருக்கும் அவர் தமிழில் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்தார்.
லீலாவதி: மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. வடிவேலுவும், ஃபகத் பாசிலும் அந்தப் படத்தில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டாலும் கீர்த்தி சுரேஷ் ஏற்றிருந்த லீலாவதி என்ற கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்தது. மாமன்னன் வெற்றி பெற்றதால் கண்டிப்பாக இன்னொரு ரவுண்டு தமிழ் சினிமாவில் வரலாம் என்கிற முனைப்பில் இருக்கிறார் கீர்த்தி.
ரகு தாத்தா: கீர்த்தி சுரேஷின் நடிப்பில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவை தவிர்த்து பாலிவுட்டிலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. ரகு தாத்தா படத்தின் ப்ரோமோ நேற்று வெளியானது. அதில் ஹிந்தியை கீர்த்தி அழிக்கும்படி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கிடையே கீர்த்தி சுரேஷை சுற்றி கிசுகிசுக்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன.
காதல்: அதாவது அவர் காதல் செய்துகொண்டிருக்கிறார் என்றும் விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார். சூழல் இப்படி இருக்க பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கீர்த்தி சுரேஷின் உடைகள் கவனம் பெற்றன. அதிலும் அவர் கவர்ச்சி காட்டுகிறார் என்ற முத்திரையும் விழ ஆரம்பித்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் காட்டுகிறார் என்ற பேச்சுக்கு அவரது தாய் மேனகா விளக்கமளித்திருக்கிறார்.
மேனகா விளக்கம்: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தன்னுடைய லிமிட் என்னவென்று கீர்த்தி சுரேஷுக்கு தெரியும். அவர் அணியும் மாடர்ன் உடைகள் எல்லாம் லண்டன், மும்பையில் சர்வ சாதாரணம். பலரும் அந்த மாதிரியான உடைகளை அணிந்து வெளியே செல்வதை பார்க்க முடியும். கீர்த்தி சுரேஷ் படித்தது ஃபேஷன் பற்றிதான். கிளாமரில் ஒரு லிமிட்டை அவர் கடைப்பிடித்துவருகிறார். அதை அவர் மீறமாட்டார். தனக்கு எது சரி என்பது கீர்த்தி சுரேஷுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் அவருக்கு திருமணம் செய்யும் எந்த ஐடியாவும் இப்போதைக்கு இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











