Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மீன்கள் நம் நண்பர்கள், நண்பர்களை சாப்பிடலாமா?: கேட்கிறார் நடிகை ரிச்சா
மும்பை: இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகி நம்மை மீன் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பீட்டா அமைப்பு நடிகர், நடிககைள், பிரபலங்களை வைத்து விலங்குகள், உயிரினங்களை காக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டு வருகிறது. நம்ம நாய் பிரியை த்ரிஷாவும் பீட்டா விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகியுள்ளார்.
கடற்கன்னி
ரிச்சா கடற்கன்னி போல் உடை அணிந்து கடல் தாயின் மடியில் தவழும் மீன்களை சாப்பிடுவதற்கு எதிராக விளம்பரம் செய்துள்ளார்.
மீன் நண்பா
மீன்கள் நம் நண்பர்கள். அது உணவு அல்ல என்ற வாசகம் அடங்கிய அட்டையை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரிச்சா.
விலங்குகள்
விலங்குகள் என்றால் எப்பொழுதுமே எனக்கு ஒரு சாப்ட் கார்னர் உண்டு. இந்நிலையில் பீட்டா என்னை அணுகியபோது அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன் என்றார் ரிச்சா.
கரீனா
பாலிவுட் நடிகர்கள் ஷாஹித் கபூர், ஜான் ஆபிரகாம், நடிகை கரீனா கபூர் ஆகியோர் பீட்டா விளம்பரத்தை பார்த்து சைவப் பிரியர்கள் ஆகிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.