»   »  நடிப்பில் செஞ்சுரி போட விரும்பும் 'மெர்சல்' நடிகை!

நடிப்பில் செஞ்சுரி போட விரும்பும் 'மெர்சல்' நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் 'விவேகம்' பட நாயகி காஜல் அகர்வால் ஏற்கெனவே 50 படங்களை நடித்து முடித்துவிட்டார்.

முதலில் கொஞ்சம் குண்டாக இருந்த காஜல் அகர்வால் தற்போது உடல் இளைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார். 30 வயதைக் கடந்தாலும் முன்பு இருந்ததை விடக் கொஞ்சம் வயது குறைந்தவராகவே தெரிகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது புதிதாக அறிமுகமாகும் இளம் நடிகையைப் போலத் தோற்றத்தில் இருந்தார். வருடங்கள் ஆக ஆக நடிகைகளுக்கு வயது குறையுமோ என்னவோ?

மெர்சல் நாயகி :

மெர்சல் நாயகி :

'விவேகம்' படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்ததைத் தொடர்ந்து தமிழில் அடுத்து விஜய்யுடன் 'மெர்சல்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தனக்கு நல்ல நடிகை எனப் பெயர் வாங்கித்தரும் என இந்தப் படத்தையும் மிகவும் எதிர்பார்க்கிறார் காஜல்.

தெலுங்கு :

தெலுங்கு :

அடுத்து தெலுங்கில் 'எம்எல்ஏ' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நாயகியாகத் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும், 'ராஜு காரி காதி 2' படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கிறார்.

செஞ்சுரி ஆசை :

செஞ்சுரி ஆசை :

இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் காஜல் அகர்வால் இன்னும் 50 படங்களில் நடித்து செஞ்சுரி போடவேண்டும் என்ற தனது ஆசையை சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

டான்ஸ் குயின் :

டான்ஸ் குயின் :

கிளாமரான தோற்றத்தில் மட்டுமல்லாமல், நன்றாக நடிக்கவும், நடனமாடவும் தெரிந்த காஜல் அகர்வால், வாய்ப்புகள் கிடைத்தால் இன்னும் ஐந்து வருடங்கள் கூடத் திரையுலகில் தாக்குப் பிடித்து இருக்கலாம்.

வாய்ப்பு கிடைக்குமா :

வாய்ப்பு கிடைக்குமா :

தற்போதைய முன்னணி ஹீரோக்கள் படத்திற்குப் படம் புதிய ஹீரோயின்களுடன் நடிப்பதை அதிகம் விரும்புவதால் அந்த வாய்ப்புகள் காஜலுக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். இருந்தாலும் 100 படங்களில் நடித்து முடிக்கும் ஆசையில் நம்பிக்கையுடன் இருக்கிறார் காஜல் அகர்வால்.

English summary
Kajal Agarwal, who has acted in over 50 films so far, has recently announced her desire to act in 50 more films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil