நான் அப்படிப்பட்ட பெண் இல்ல.. பிரியா பவானி சங்கர் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முக்கியமான நடிகர்களின் படங்களில் லீடு ரோலில் நடித்து டாப் நடிகையாக மாறி உள்ளார்.

Meyaadha Maan heroine Priya Bhavani Shankar opens up about her personal life

தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை பிரியா பவானி: சின்னத்திரையில் இருந்து வந்த நடிகை பிரியா பவானி சங்கருக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த ஆண்டில் அதிகமான படங்களில் நடித்த நடிகையாக பிரியா பாவனி சங்கர் இருக்கிறார். இவர் நடிப்பில், அகிலன், பத்து தல, ருத்ரன் என அடுத்தடுத்த படங்கள் வெளியானது. எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

தயாரிப்பாளருக்கு பிடித்த நடிகை: தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரியா பாவனி சங்கர் தெலுங்கிலும் பிரபலமாகிவிட்டார். என்னத்தான் தமிழில் படவாய்ப்பு குவிந்தாலும், சம்பளத்தை அதிகரிக்காமல், பேரம் பேசாமல், கால்ஷீட்டை சரியாக கொடுத்துவிடுவதால், நடிகை பிரியா பாவனி சங்கருக்கு என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. இதனால், அவர் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

கைவசம் உள்ள படம்: தற்போது இவரின் கைவசம், இந்தியன் 2, டிமான்டி காலனி 2, ஜீப்ரா, அரண்மனை 4, ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத படம் ஒன்றிலும், வரிக்குதிரை என்ற தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிரியா பவானி சங்கர் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி அளித்துள்ள பிரியா பாவனி சங்கரிடம், செய்தியாளர், நீங்க ரொம்ப ஸ்மார்ட்டான பெண், சென்சிட்டிவ்வான பெண், மிகவும் அறிவான பெண் என்று கூற, உடனே குறுக்கிட்ட பிரியா, நான் அறிவான பெண் என்று கூறுவது சரியாக இருக்காது. எப்போதும் எனக்கு சரி என்று நினைக்கக்கூடிய என் மனதிற்கும் என் மூளைக்கும் சரியாக இருக்குமோ அதைத்தான் செய்வேன்.

நான் அப்படிப்பட்ட பெண் இல்ல: ஒரு முடிவை எடுத்துவிட்டு அது சில நேரங்களில் ஏன் இதை செய்தோம் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டோம் என்று நான் வருத்தப்பட்டது உண்டு. அதனால் தான் நான் அறிவான பெண் என்று கூறுவதைவிட பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் பெண் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X