சதானந்த கவுடாவின் மகனை போலீசாரே காப்பாற்ற நினைக்கிறார்களா?: நடிகை மைத்ரியா
பெங்களூர்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கை போலீசாரே காப்பாற்ற நினைக்கிறார்களா என்று அவர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த நடிகை மைத்ரியா கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கன்னட நடிகை மைத்ரியா கவுடா என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் பிறகு அவர் கார்த்திக் மீது பெங்களூர் ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார புகார் பதிவு செய்தனர்.
இதையடுத்து கார்த்திக் முன்ஜாமீன் கோரி பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக்கின் முன்ஜாமீன் மனு மீது சனிக்கிழமை மீண்டும் விசாரணை நடந்தது. வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

விசாரணை
போலீசார் என்னிடம் இதுவரை 20 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஆதாரங்கள்
நானும், கார்த்திக்கும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோ ஆகிய ஆதாரங்களை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

கார்த்திக்
வழக்குப்பதிவு செய்தும், ஆதாரங்களை பெற்றுக் கொண்ட பிறகும் போலீசார் கார்த்திக்கை இன்னும் ஏன் கைது செய்யவில்லை?

சம்மன்
2 முறை சம்மன் அனுப்பியும் கார்த்திக் விசாரணைக்கு வரவில்லை. 3 தனிப்படைகள் அமைத்த பிறகும் அவர் கைது செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு வேளை போலீசாரே அவரை காப்பாற்ற நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொலை மிரட்டல்
கார்த்திக் குடும்பத்தார் எனக்கு தினமும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். நான் ஒன்றும் பணத்திற்காக புகார் கொடுக்கவில்லை என்றார் மைத்ரியா.


Click it and Unblock the Notifications











