அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படத்தில் இணைந்த மின்னல் முரளி ஹீரோயின்.. குபேரா பட வில்லனும் நடிக்கிறாராம்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'ராக்கா' படத்தில் மின்னல் முரளி பட நடிகையும் குபேரா பட வில்லனும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரிய பட்ஜெட்டில் அட்லி இந்த படத்தை உருவாக்கி வரும் நிலையில், பல திறமையான பிரபலங்களையும் சேர்த்து வருகிறார்.
ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து கடைசியாக அட்லி இந்தியில் இயக்கிய ஜவான் திரைப்படம் 1100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. அந்த படத்தைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் அரசியலில் களமிறங்கிய நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்கி வருகிறார்.

புஷ்பா 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் சம்பளம் அதிகபட்சமாக 300 கோடி வரை உயர்ந்துள்ளதாகவும் ஷாருக்கான் மற்றும் அல்லு அர்ஜுன் தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளதாக கூறுகின்றனர்.
பிரம்மாண்டமாக உருவாகும் ராக்கா: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதிகபட்சமாக 700 கோடி பட்ஜெட்டில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர் நடித்து வரும் ராக்கா படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமாயணம் திரைப்படம் 2000 கோடி பட்ஜெட்டிலும், வாரணாசி திரைப்படம் 1200 கோடி பட்ஜெட்டிலும் உருவாகி வரும் நிலையில், அந்த படங்களுக்கு போட்டிப் போடும் அளவுக்கு ராக்கா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்: அல்லு அர்ஜுனை வைத்து எந்தவிதமான ஆக்ஷன் காட்சிகளையும் எடுத்து விடலாம். தீபிகா படுகோன் 2வது முறையாக மீண்டும் கர்ப்பமாக உள்ள நிலையில், அவரை வைத்து நீண்ட நேரம் படப்பிடிப்பு நடத்துவது கஷ்டம் என்பதால், மற்ற நடிகைகளுக்கும் ஸ்பேஸ் கொடுத்து வருகிறாராம் அட்லி என்கின்றனர்.

மின்னல் முரளி ஹீரோயின்: மிருணாள் தாக்கூரும் இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மின்னல் முரளி பட நடிகை ஃபெமினா ஜார்ஜ் இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஃபெமினா ஜார்ஜும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராக்கா படத்தின் அல்லு அர்ஜுன் ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்துள்ளார்.
குபேரா பட வில்லன்: கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தில் வில்லனாக நடித்திருந்த ஜிம் சர்ப் 'ராக்கா' படத்திலும் மெயின் வில்லனாக இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பத்மாவதி, ராக்கெட் பாய்ஸ், நீரஜா உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஜிம் சரப் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications