ஜகஜால கில்லாடியா இருக்காரே ஜெயிலர் மருமகள்.. ஜோதிகாவுக்கே அந்த விஷயத்தில் டஃப் கொடுக்கும் மிர்னா!
சென்னை: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக நடித்து பிரபலமான மலையாள நடிகை மிர்னா மேனன், பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டு தற்போது நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல் ஜோடியாக பர்த் மார்க் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வந்த சுவடே தெரியாமல் ஃபிளாப் ஆகி விட்டது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்த படத்துக்காக ஸ்டன்ட் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மட்டுமின்றி சக நடிகைகளையே ஷாக் ஆக்கியிருக்கிறார்.
முத்துவேல் பாண்டியன் மருமகள்: மலையாளத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடித்த மிர்னா மேனன், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வசந்த் ரவியின் மனைவியாகவும் முத்துவேல் பாண்டியனின் மருமகளாகவும் நடித்திருப்பார். என் மருமகளை பத்தி ஏதோ சொன்னியேன்னு சொல்லி, ரஜினிகாந்த் எதிரிகளை வேட்டையாடும் காட்சியில் இவர் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு இவரது முகம் வந்து செல்லும் அளவுக்கு அந்தக் காட்சியிலேயே ரெஜிஸ்டர் ஆகியிருப்பார்.

பர்த் மார்க்: ஷபீர் கல்லரக்கல், மிர்னா மேனன் நடிப்பில் வெளியான பர்த் மார்க் படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார். பிப்ரவரி 23ம் தேதி வெளியான படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் படம் கொஞ்சம் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது.
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி: மலையாள நடிகை மிர்னா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரிய கிழிந்த ஜீன்ஸ் போட்டும் கவர்ச்சியான உடை அணிந்தும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வந்த நிலையில், தற்போது வெறித்தனமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜிம்மில் ஜிம்னாஸ்டிக்: ஜகஜால கில்லாடியா இருக்காரே ஜெயிலர் மருமகள் என ரசிகர்கள் வாய் பிளந்து வாட்டர் ஃபால்ஸ் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு ஏகப்பட்ட வித்தைகளை காட்டி அசத்தி விட்டார் மிர்னா மேனன். ஜோதிகா சமீபத்தில் ஜிம்மில் ஜிம்னாஸ்டிக் வித்தையெல்லாம் காட்டியதை விட மிர்னா மேனன் வேறலெவல் வெறித்தனத்தை காட்டி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
ஆக்ஷன் பிலிமா?: அடுத்து மிர்னா மேனன் ஏதாவது ஆக்ஷன் பிலிம்ல நடிக்கப் போறாரா? இப்படி ஸ்டன்ட் பயிற்சி எல்லாம் பண்றாரே, ஜெயிலர் 2வில் ரித்து ராக்ஸை இவரே காப்பாத்துவார் போல தெரியுதே என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
சக நடிகைகள் ஷாக்: ஐஸ்வர்யா லக்ஷ்மி, தேஜு அஷ்வினி உள்ளிட்ட சக நடிகைகள் மிர்னா மேனனின் அதிரடியான ஆக்ஷன் வொர்க்கவுட்டை பார்த்து ஷாக் ஆகி ஃபயர் எமோஜிக்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். மேலும், தியா மேனன், அனிதா சம்பத் உள்ளிட்ட பல பிரபலங்கள் மிர்னா மேனனின் இந்த சாகச வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











