பேட்மேன் கார் வாங்கிய மிருணாளினி ரவி.. யப்பா என்னம்மா கார் ஓட்டிட்டு வராங்கன்னு பாருங்க!

சென்னை: லிமிடட் எடிஷன் சொகுசு காரான பேட்மேன் மாடல் காரை நடிகை மிருணாளினி ரவி வாங்கியுள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

டிக் டாக்கிற்கு முன்னதாக வைரலாக இருந்த டப்ஸ்மாஷ் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மிருணாளினி ரவி கடந்த 2019ம் ஆண்டு தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Mirnalini Ravi buys a new Batman themed Car and shares her joy
Photo Credit:

சாம்பியன், எம்ஜிஆர் மகன், எனிமி, ஜாங்கோ, கோப்ரா மற்றும் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

புதிய படங்கள் ஏதுமில்லை: விக்ரம் உடன் நடித்த கோப்ரா படம் படுதோல்வியை சந்தித்தது. விஜய் ஆண்டனியுடன் நடித்த ரோமியோ படமும் பெரிதாக ஓடவில்லை. அந்த படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வருடமாக இவருக்கு புதிதாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. பல இளம் நடிகைகள் வந்த வேகத்தில் பட வாய்ப்புகளை இழந்து தவிப்பதை போலவே திறமையான மிருணாளினி ரவிக்கும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சோஷியல் மீடியா பக்கம் கூட பெரிதாக தலை காட்டாமல் இருர்ந்து வந்தார்.

பேட்மேன் கார்: டிசி ரசிகையான மிருணாளினி ரவி தற்போது புதிதாக பேட்மேன் தீமில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டதாக பதிவிட்டுள்ள அவர் கார் வாங்கும் போது எடுத்த புகைப்படங்களையும் கார் ஓட்டும் வீடியோ க்ளிப்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்த்தும் ரசிகர்கள்: பரவாயில்லை கார் ஸ்டார்ட் பண்ற கோர்ஸ் வரை கத்துக்கிட்டீங்க போல என சிலர் கிண்டல் செய்தாலும், பல ரசிகர்கள் உண்மையான திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது என்றும் தொடர்ந்து நிறைய படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் மிருணாளினி என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் மிருணாளினி ரவிக்கு 1.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X