லேவன்டர் நிற வைரம்.. சேலையில் மினுமினுக்கும் மிர்னாலினியின் லேட்டஸ்ட் பிக்ஸ் !

சென்னை: லேவன்டர் நிற சேலையில் மிக அசத்தலான போட்டோசூட்டை வெளியிட்டுள்ளார் மிர்னாலினி. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதற்கேற்ற கேப்சனையும் கொடுத்திருக்கிறார்.

நடிகை மிர்னாலினியை நாம் சூப்பர் டீலக்ஸ் மற்றும் சாம்பியன் படங்களில் பார்த்திருப்போம். இவர் டப்ஸ்மேஷ் எனும் செயலியில் பிரமலடைந்து பின் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகை. பெங்களூருவில் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்த மிர்னாலினி நடிக்கும் ஆர்வம் உடையவர் அந்த சமயத்தில் பிரபலமான டப்ஸ்மேஷ் செயலி மூலம் நடித்து பல லட்சம் ரசிகர்களை இணையத்தில் பெற்றார்.

Mirnalini ravi latest photoshoots

இணையவாசிகள் முதல் சினிமா வாசிகளை வரை யார் இந்த மிர்னாலினி என தேட துவங்கினார்கள். அதற்குள் தனது முதல் படமான சாம்பியன் படத்தில் ஒப்பந்தமாகி ஆச்சரியமூட்டினார் மிர்னாலினி. அதன்பின் சூப்பர் டீலக்ஸ் படம் எடுக்கபட்டாலும். சாம்பியன் படம் தாமதமாக வந்ததால் சூப்பர் டீலக்ஸ் மிர்னாலிக்கு முதல் படமாக அமைந்தது. அதன்பின் தெலுங்கில் கடலகொண்டா கணேஷ் படத்தில் நடித்து இருந்தார்.

மிர்னாலினி தற்போது தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சரியான கதை தேர்வு ஒரு நாயகிக்கு முக்கியமான ஒன்றாக தற்போது சினிமாவில் பார்க்கப்படுகிறது. அதை தாண்டி இணையத்தில் அவரின் ரசிகர் கூட்டமும் கணக்கு வைக்கப்படுகிறது . இணையத்தில் தங்களின் ரசிகர்களை கவர அனைத்து நாயகிகளும் எடுக்கும் ஒரே யுக்தி போட்டோசூட். இதை சீரான இடைவெளியில் சரியாக செய்து வருகிறார் மிர்னாலினி .

தற்போது லேவன்டர் நிற சேலையில் மிக அசத்தலான போட்டோசூட்டை நடத்தியிருக்கிறார் மிர்னாலினி. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிவிட்டு அதற்கேற்ற கேப்சனையும் கொடுத்திருக்கிறார் .

Mirnalini ravi latest photoshoots

ஒன்றில் இந்த உலகின் மிக அழகான விசயங்களை பார்க்கவும் முடியாது தொடவும் முடியாது உணரத்தான் முடியும் என கூறியுள்ளார். மற்றொன்றில் அமித்திஸ்ட் என கூறியிருக்கிறார் இதற்கு லேவன்டர் நிற வைரம் என்றும் பொருள் இருக்கிறது. மேலும் ஒரு போட்டோவில் இவளின் விருப்பம் துக்கம் மற்றும் மென்மையானது லேவன்டர் பூவை போல என்று கூறியுள்ளார் .

மிர்னாலினி அடுத்ததாக சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர்.மகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வருத்தபடாத வாலிபர் சங்க இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார் . இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்க பட்டு தவறிப்போனது கூடிய விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Dubsmash Mirnalini Dance : தெலுங்கு படத்தில் போட்ட கெட்ட ஆட்டம் | Valmiki Telugu movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X