ரெட்ட தல படத்தில் 3 ஹீரோயினா?.. தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மாடல்.. யாரு இந்த ‘தீவ்ரா ஹரன்’?

சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து மான் கராத்தே மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல திரைப்படம் நாளை டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

கிரிஸ்துமஸ் தினத்துக்கு கிரிஸ் திருக்குமரன் படம் கேட்கவே ரைமிங்காக இல்லை. வணங்கான் படத்தில் சைலன்ட்டாக இருந்து வைலன்ட் சம்பவம் செய்த அருண் விஜய் ஓபனிங் பேட்ஸ்மேனும் நான் தான் ஃபினிஷிங் பேட்ஸ்மேனும் நான் தான் என ரெட்ட தலையுடன் நாளை தியேட்டர்களை தெறிக்கவிட காத்திருக்கிறார்.

Model Actress Deevra Haran debut in Arun Vijay s Retta Thala
Photo Credit:

3 ஹீரோயின்கள்: கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல நாளை விக்ரம் பிரபுவின் சிறை படத்துடன் போட்டியாக வெளியாகிறது. அந்த படத்தில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரபல நடிகைகளுடன் அறிமுக மாடல் நடிகையான 'தீவ்ரா ஹரன்' நடித்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு இவர் புதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Model Actress Deevra Haran debut in Arun Vijay s Retta Thala
Photo Credit:

யாரு இந்த தீவ்ரா ஹரன்: இன்ஸ்டாகிராம் பிரபலங்களும், பிக் பாஸ் பிரபலங்களும் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோயின்களாக மாறி வந்த நிலையில், மீண்டும் ஒரு மாடல் நடிகை ரெட்ட தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார். அருண் விஜய்யுடன் ஸ்க்ரீன் ஸ்பேஸை பகிர்ந்துள்ள தீவ்ரா ஹரன் இந்த படத்தில் க்ரே ஷேடில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட்ட தல படத்தைத் தொடர்ந்து மேலும், சில படங்களிலும் இவர் கமிட் ஆகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X