twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாடலிங் ஒன்றும் மூளையில்லா வேலை இல்லை: நேஹா தூபியா

    By Siva
    |

    மும்பை: மாடலிங் ஒன்றும் மூளையில்லாத வேலை கிடையாது என்று மாடலும், நடிகையுமான நேஹா தூபியா தெரிவித்துள்ளார்.

    மாடலும், பாலிவுட் நடிகையுமான நேஹா தூபியா கிங்ஃபிஷர் சூப்பர்மாடல்ஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் மாடலிங் பற்றியும் மாடல்கள் பற்றியும் பேசியுள்ளார்.

    Modelling is not a brainless profession: Neha Dhupia

    இது குறித்து அவர் கூறுகையில்,

    மாடலிங் என்பது மூளையில்லாத வேலை என்பதில் உண்மை இல்லை. பல் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கார்பரேட் வேலை செய்பவர்கள், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மாடலிங் செய்கிறார்கள். கடினமாக உழைக்க வேண்டும். அதுவும் நீண்ட நேரம் உழைக்க வேண்டும். தினமும் புதிய பாஸ் இருப்பார்கள்.

    நீங்கள் செய்யும் வேலையை சிறப்பாக செய்தால் இது ஒரு சிறந்த இடம். நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே இந்த துறைக்கு வர வேண்டும். மாடலிங் செய்ய வேண்டும் என்றால் பாசிட்டிவாக நினைக்க வேண்டும்.

    இது இப்படி தான் என்ற எண்ணத்தோடு வரக் கூடாது. குறைகள் இருக்கிறது என்னால் மாடல் ஆக முடியாது என்று நினைத்தாலும் மாடலிங் செய்து பாருங்கள். நியூயார்க்கில் மாடலிங் துறையில் புயலைக் கிளப்பும் பெண்ணுக்கு தோல் பிரச்சனை உள்ளது. நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்றார்.

    English summary
    Model-turned-actress Neha Dhupia, who also represented India at the Miss Universe pageant in 2002, says modelling is not a brainless profession but a job that needs lot of “hard work”.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X