மோகன்லாலுடன் ஆசின்
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், ஆசினும் இணைந்து புதிய ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர். நைன்ட்டீன்த் ஸ்டெப் என இப்படத்திற்குப் பெயரிட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து வந்தேமாதரம் மற்றும் தேசியகீதம் ஆகிய இரு ஆல்பங்களை உருவாக்கிய பரத் பாலாதான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.பழம்பெரும் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. பரத் பாலாவே இப்படத்தை இயக்கவும் உள்ளார்.
தென்னிந்திய திரைத் தாரகை ஆசின்தான் இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் ஆங்கிலப் படம் இது.
ஏற்கனவே ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்க மோகன்லாலுக்கு அழைகப்பு வந்தது. ஆனால் அந்தப் படத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மோகன்லால் வேறு படத்திற்குப் போய் விட்டார்.
இந்தப் படத்திற்கும் கூட 6 மாதங்களுக்குப் பிறகுதான் மோகன்லால் நடிக்க வருகிறார். காரணம், கஜினி, வேல் என இரு படங்களில் ஆசின் பிசியாக இருப்பதால் அவருக்காக ஆறு மாதங்கள் கழித்து இந்தப் படத்தை எடுக்கவுள்ளனர்.
மல்லுவுட்டின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டியும் ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











