திருமணமானால் சும்மா விடுவேனா: முன்னாள் காதலருக்கு நடிகை பொளேர்

By Siva

மும்பை: தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது தான் தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

2014ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின்போது தொழில் அதிபரும், தன்னுடைய அப்போதைய காதலருமான நெஸ் வாடியா தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா போலீசில் புகார் அளித்தார்.

அந்த வழக்கில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் மும்பை போலீசார்.

ஜாமீன்

ஜாமீன்

ப்ரீத்தி தொடர்ந்த வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ளார் நெஸ் வாடியா. அவர் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் அளிக்கப்பட்டது. இந்த நிபந்தனை நெஸ் வாடியாவுக்கு தலைவலியாக உள்ளது. இந்நிலையில் அவர் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

நெஸ் வாடியா மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து பதில் அளிக்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு உத்தரவிட்டது. இது குறித்து பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார் ப்ரீத்தி. இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ப்ரீத்திக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிபந்தனை

நிபந்தனை

வெளிநாட்டிற்கு செல்வது கடினமாக உள்ளது என்றால் ஜாமீன் நிபந்தனைகள் மாற்றியமைக்கப்படும் என்று ப்ரீத்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வாடியாவின் வழக்கறிஞர் கூறியதாவது, ஜாமீன் நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரிக்கை விடுக்கவில்லை. வழக்கை முடித்து வைக்க கோருகிறோம். இந்த வழக்கால் வாடியா மன அழுத்தத்தில் உள்ளார் என்றார்.

ஐபிஎல்

ஐபிஎல்

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தற்போது திருமணமாகிவிட்டது. அவர் தன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார். ஐபிஎல் ஏலத்தின்போது கூட வாடியாவும், ப்ரீத்தியும் ஒரே டேபிளில் அமர்ந்திருந்தனர் என்று நெஸ் வாடியாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். யார் என்ன சொன்னாலும் தனக்கு கால அவகாசம் வேண்டும் என்பதில் மாற்றமே இல்லை என்கிறார் ப்ரீத்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X