Don't Miss!
- News
இடைத்தேர்தல் வேட்பாளர்.. கோரிக்கை வைத்த முக்கிய நிர்வாகிகள்.. ‘ஓகே’ சொன்ன ஓபிஎஸ்.. என்ன நடந்தது?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலாகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பிப்ரவரியில் திருமணம்..ஐந்து மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயான நடிகை..ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை : மலையாள நடிகை அஞ்சலி நாயர் திருமணமான ஐந்தே மாதத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
மலையாள நடிகை அஞ்சலி நாயர் 1994 ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'மானதே வெள்ளித்தெரு' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார்.
இதையடுத்து, வினாடிகள், ஆடு, கானல், பெண், காளி, கம்மட்டிபாடம், ஒப்பம், கம்மார சம்பவம் ஆகிய படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
சசிக்குமார் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?...கேக்கும் போதே பயமா இருக்கே

நடிகை அஞ்சலி நாயர்
நடிகை அஞ்சலி நாயர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'த்ரிஷ்யம் 2' திரைப்படத்தில் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் மோகன்லாலை உளவு பார்க்கும் பெண் காவலாளியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அஞ்சலி நாயருக்கு பெயரை பெற்றுத்தந்து. மேலும், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திலும், விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திலும் நடித்துள்ளார்.

இரண்டாவது திருமணம்
நடிகை அஞ்சலி நாயர், கடந்த 2011ம் ஆண்டு அனிஷ் என்ற இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில், 2016ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் உதவி இயக்குநர் அஜித் ராஜூ என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பெண் குழந்தை
இந்நிலையில், நடிகை அஞ்சலி தனது முகநூல் பக்கத்தில், வாழ்க்கை அதிசயங்களால் நிரம்பியுள்ளது, தங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், புதிய பெண் குழந்தையை வரவேற்கிறோம் என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐந்து மாதத்தில் குழந்தையா
நடிகை அஞ்சலி நாயர் மற்றும் அஜித் ராஜூ தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சில ஏடாகூடமான ரசிகர்கள் உங்கள் இருவருக்கும் பிப்ரவரியில் தான் திருமணமே நடைபெற்றது. ஐந்து மாதத்திற்குள் குழந்தையா என கிண்டலாக கேட்டுவருகின்றனர்.ஆனால், இவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதமே திருமணம் நடந்து விட்டது என்று கூறப்படுகிறது.