twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹேர்ஸ்டைலிஸ்ட்டை துரத்துங்க ஐஸ்வர்யா...!

    By Siva
    |

    நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் சேலையில் வந்து அசத்தினார்.

    ஐஸ்வர்யா ராய் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பிறகு கேமராக்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். இந்நிலையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு சென்ற ஐஸை யாரோ புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். அதில் அவர் சிக்கென்று இல்லாமல் இரட்டை நாடியுடன் குண்டாக இருந்தார். அவ்வளவு தான் ஆளாளுக்கு ஐஸ் என்ன குழந்தை பிறந்து இத்தனை மாதங்கள் ஆகியும் இப்படி உடம்பைக் குறைக்காமல் உள்ளார் என்று விமர்சி்க்க ஆரம்பித்துவிட்டனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யா கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவர் இன்னும் குண்டாகத் தான் உள்ளார். வழக்கமாக கேன்ஸ் விழாவில் டிசைனர் கவுண் அணிந்து வரும் ஐஸ் இம்முறை எடையை மறைக்க சேலையில் வந்தார். சேலை என்றால் நெட் சேலை, ஸ்டிராப் வைத்த பிளவுஸ் அணிந்து வரவில்லை.

    மாறாக தடியான துணியில் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த சேலை மற்றும் குட்டித் தொப்பையை மறைக்கும் அளவுக்கு கழுத்தில் இருந்து வயிறு வரைக்கும் வரும் பிளவுஸ் அணிந்திருந்தார். கைகள் இரண்டையும் மறைக்கும்படி முழுக்கை உள்ள பிளவுஸ் போட்டிருந்தார். அப்படியும் அவர் குண்டாகத் தான் தெரிந்தார். கேன்ஸ் விழாவுக்கு ஆண்டாண்டு காலம் சென்றாலும் அவரது உடை மற்றும் ஹேர்ஸ்டைல் சரியில்லை என்று பலர் குறை கூறி வருகிறார்கள்.

    இம்முறை உடை ஓ.கே. ஹேர்ஸ்டைல் இன்னும் கொஞ்சம் அழகாக செய்திருக்கலாம். ஐஸ் ஊருக்கு திரும்பியவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்கள் ஹேர்ஸ்டைலிஸ்ட்டை துரத்திவிடுவது தான். ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் அழகாக இருக்கும் உங்கள் முகத்தை கெடுக்கும் அந்த ஹேர்ஸ்டைலிஸ்ட் தேவையா என்பதை யோசித்துப் பாருங்கள்.

    English summary
    Mom Aishwarya Rai attends Cannes film festival in a designer saree. She has managed to hide her extra weight in this costume. Though the saree is good, hairstyle could have been better.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X