»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

லவ்லி படத்தில் மோனல், கலக்கியிருக்கிறாராம். நடிப்பில் மட்டுமல்லாது கவர்ச்சியிலும்தான். வாலி படத்தில்சிம்ரன் நிடித்தது போல இதில் இவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பாம்.

இந்தப் படத்திற்குப் பிறகு நடிப்பில் மோனல் ஒரு கோணல் என்று இனி யாரும் சொல்ல மாட்டார்களாம்!.

அதே சமயம், கவர்ச்சியிலும் கலக்கியிருக்கிறாராம். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி ரசம் சொட்ட, சொட்டவருகிறாராம் மோனல்.

கால்கேர்ள் வேடத்தில்...:

அதே போல சார்லி சாப்ளின் படத்தில் மோனல் நடிக்கும் கேரக்டர் என்ன தெரியுமா? விபச்சாரப் பெண். ஆனால், நல்ல மனதுபடைத்தவராம்!. இந்தப் படத்தில் பிரபுவும், பிரபு தேவாவும் ஹீரோக்கள்.

"ஜோதிகா போல நடிக்கனும்

கருப்பு நிலா... நீதான் கலங்குவதேன் என்று என் ஆசை மச்சானிலும், நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது என்றுஇந்திரா படத்திலும் பாடிய குட்டிப் பெண்ணை ஞாபகம் இருக்கிறதா? அப்படி இல்லாவிட்டால், ல சேனல்படத்தைப் போய் உடனே பாருங்கள்.

அப்படியே வளர்ந்து குறு குறு கண்களுடன் அழகான இளம் பெண்ணாக மாறி நிற்கிறார் மோனிஷா.

மோனிஷாவின் ஆசை என்ன தெரியுமா? ஜோதிகா போல நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது இப்போதையஒரே ஆசையாம். ஜோதிகாவைப் போல துறுதுறுப்பான, சுட்டிப் பெண்ணாக நடித்து பெயரெடுக்க வேண்டும்.

கல்லூரி மாணவியாக, வக்கீலாக... என்று தனது ஆதர்ச கேரக்டர்களை வரிசைப்படுத்துகிறார் இந்த கேரளத்துக்குட்டி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil