எங்க திருமணம் இந்து முறைப்படி தான் நடந்தது.. இது ’லவ் ஜிகாத்’ இல்லை.. கும்பமேளா மோனலிசா விளக்கம்!

திருவனந்தபுரம்: குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கும்பமேளா மோனலிசா தனது முஸ்லிம் காதலரை நேற்று கேரளத்தில் உள்ள கோயில் ஒன்றில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திருமணம் குறித்த விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

கும்பமேளா நடைபெற்றபோது அழகிய கண்களை கொண்டுள்ள மோனலிசா போன்ஸ்லேவை சில யூடியூபர்கள் வட்டமிட்டு வீடியோக்களாக எடுத்து வைரலாக்கினார். திடீரென நாடு முழுவதும் இமிடியேட் சென்சேஷனல் ஆகிவிட்டார் மோனலிசா.

Monalisa clarifies her marriage is not love jihad and she done a hindu marriage only amid controversy
Photo Credit:

மேலும், சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்த நிலையில், ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் அவரது பக்கம் திரும்பின. இந்நிலையில், மீண்டும் அவரது திருமணம் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

கேரளா ஸ்டோரி சர்ச்சை: மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா ஏன் திடீரென தனது முஸ்லிம் காதலர் பர்மான் கான் உடன் கேரளத்தில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து அங்கேயே திருமணம் செய்துக் கொண்டார் என்கிற கேள்வி வெடித்தது. மேலும், இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி என்றும் இந்து பெண்ணை ஃபேஸ்புக்கில் பேசி பழகி பர்மான் கான் திருமணம் செய்துள்ளார் என்று விமர்சனங்கள் வெடித்தன.

லவ் ஜிகாத் இல்லை: இதுதான் உண்மையான லவ் ஜிகாத் என்றும் இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு இப்படி திருமணம் செய்து கன்வெர்ட் செய்கின்றனர் என பலரும் கூச்சலிட்டு வந்த நிலையில், தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த மோனலிசா, தனக்கும் தனது காதலருக்கும் இந்து முறைப்படி கோயிலில் தான் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம் தான். இது லவ் ஜிகாத் கிடையாது என ஓபனாகவே பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கேரளத்திலேயே வாழ விருப்பம்: மேலும், மத்திய பிரதேசத்துக்கு எல்லாம் செல்லும் எண்ணம் இல்லை என்றும் இருவரும் கேரளத்திலேயே வாழ விரும்புகிறோம் என்றும் தங்களின் நிலைப்பாட்டை மோனலிசா தெரிவித்துள்ளார். புதிதாக திருமணம் செய்துக் கொண்ட மோனலிசா மற்றும் பர்மான் கானை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X