»   »  'இந்த' விஷயத்தில் காஜலும் தமன்னா போன்றே இருக்கிறாரே: பொழைச்சுக்குவாரு!

'இந்த' விஷயத்தில் காஜலும் தமன்னா போன்றே இருக்கிறாரே: பொழைச்சுக்குவாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காசு பணம் துட்டு மணி மணி அதற்காக தான் படங்களில் நடிக்கிறேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் தமிழில் அஜீத்துடனும், தெலுங்கில் சீனியர் சிரஞ்சீவியுடனும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் தனுஷை இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறுகையில்,

பணம்

பணம்

ஒரு படத்தில் நடிக்க கதை மற்றும் கதாபாத்திரம் முக்கியம் என பல ஹீரோயின்கள் கூறுகிறார்கள். அதே போன்று பணமும் முக்கியம் ஆகும். நான் நடிக்க வந்த புதிதில் பணத்தை கண்டுகொள்ளவில்லை.

சம்பளம்

சம்பளம்

கொடுக்கும் சம்பளத்தை மறுபேச்சு பேசாமல் வாங்கிக் கொண்டேன். வந்தோமா, நடித்தோமா என்று இருந்தேன். அதன் பிறகே தெளிவு பிறந்து மனநிறைவு அளிக்கும் கதாபாத்திரம் மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

நடிகைகள்

நடிகைகள்

நடிகைகளுக்கு பணம் முக்கியமான விஷயம். எல்லோருமே பணத்திற்காகவே நடிக்கிறார்கள். நானும் அப்படித் தான். ஒரு ஆண்டு முடிந்தவுடன் எத்தனை படங்களில் நடித்தோம், எவ்வளவு சம்பாதித்தோம் என்று பார்த்து அதற்கேற்றபடி அடுத்த ஆண்டில் நடிப்பேன் என்றார் காஜல்.

தமன்னா

தமன்னா

படங்களில் குத்தாட்டம் போட அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் நான் குத்தாட்டம் போடுகிறேன். பணம் முக்கியம் என தமன்னாவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Kajal Agarwal said that money is really important for her. She chooses movies not only for roles but also for enough money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil