கேப்டன் ஜோடி மோனிகா பேடி!

By Staff

போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி 5 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் விடுதலையான தாதா அபு சலீமின் காதலியான, இந்தி நடிகை மோனிகா பேடி, விஜயகாந்த் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

விஜயகாந்த நடித்து வரும் 150வது படம் வித்தகன். இப்படத்தை பிரமாண்டமாக எடுத்து வருகிறார் விஜயகாந்த்.

அவரது மச்சான் சுதீஷ்தான் தயாரிப்பாளர். மகேஷ் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் மோனிகா பேடியை நடிக்க வைக்கவுள்ளாராம் மகேஷ். இதுதொடர்பாக மோனிகாவையும் அவர் அணுகியுள்ளார். மோனிகாவை சந்தித்துப் பேச மும்பைக்கு விரைந்த அவர் மோனிகாவிடம் பேசி, வித்தகன் படத்தில் நடிக்க வருமாறு கோரியுள்ளார்.

அவரது அழைப்பை ஏற்ற மோனிகா, வித்தகனில், விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.

மோனிகா தவிர கேப்டனுக்கு இன்னொரு நாயகியும் உண்டாம்.

எத்தனை ஜோடிகள் இருந்தால் என்ன, தலைவர்தானே பக்கம் பக்கமாக வசனம் பேசப் போறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X