நதிகள் நனைவதில்லை படத்தில் நனைந்த மோனிகா
நதிகள் நனைவதில்லை படத்தில் மழைப்பாட்டில் கவர்ச்சிக் குளியல் போட்டுள்ளாராம் நடிகை மோனிகா.
வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் படம் 'நதிகள் நனைவதில்லை'. இதில் ஹீரோவாக பிரணவ் என்பவர் நடிக்க, ஹீரோயின்களாக மோனிகாவும், நிஷாவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் பாலாசிங், செந்தில், குண்டுகல்யாணம், சிங்கமுத்து, மதுரை முத்து, பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் சீத்தாராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வித்தியாசமான காதல்
காமராசு', ‘அய்யா வழி' ஆகியப் படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘நதிகள் நனைவதில்லை'. காதலை வித்தியாசமான முறையில் சொல்வதோடு, பிள்ளைகளை பெற்றொர்கள் எப்படி வழி நடத்த வேண்டும், என்ற கருத்தையும் வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது.

தனி மனிதனின் கோபம்
ஹிட்லரின் பெரும் கோகம் தான், யூதர்களை கொல்ல விஸ்வரூபம் எடுத்தது. தனிமனிதனின் கோபமும், கூட்டணி அமைத்தால் சமூகத்தைப் பற்றி எரிய வைத்து விடும்.
தன்னை உணர்ந்த ஒருவன், எப்படி காதலிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காமல் சுயமரியாதையோடு இயங்குகிறான் என்பதை செல்லுலாய்டில் பேசும் சிற்பமே ‘நதிகள் நனைவதில்லை' என்கிறார் படத்தின் இயக்குநர் பி.சி.அன்பழகன்.

டூப் போடத நாயகன்
மனித உணர்வுகளின் கறுப்பு பக்கங்களை, அதன் அர்த்தம் விலாகாமல், விலாவும் நோகும் காமெடி காட்சிகளுடன் விளக்கும் படமே ‘நதிகள் நனைவதில்லை'. இப்படத்தில் எதார்த்தமான மூன்று சண்டைக்காட்சிகளுக்காக, டூப் போடாமல் நடித்து, நாயகன் பிரணவ் இரத்தக் குளீயலையே நடத்தியிருக்கிறார் என்றும் இயக்குநர் கூறினார்.

மதுரை முத்து
மதுரை முத்துவும், டவுட் செந்திலும் இணைந்து கலக்கும் காமெடி ரகளையால் யூனிட் ஆட்கள் வேலைப் பளுவை மறந்து சிரித்திருக்கிறார்கள்.

குமரியில் படப்பிடிப்பு
இப்படத்தின் ஏழு பாடல்களும், ஏழு ஸ்வரங்களாக நெஞ்சை அள்ளுகின்றன. கடவுளின் தேசமான குமரி மாவட்டத்தின் இயற்கை கொஞ்சும் பகுதிகளை கார்த்திக்ராஜா படம் பிடித்துள்ளார் என்கிறார் இயக்குநர் அன்பழகன்.

மோனிகா மழை கவர்ச்சி
அவர் கடைசியாக நடித்த படம் நதிகள் நனைவதில்லை. இந்தப் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டே மோனிகாதானாம். மழையில் நனைந்து கதாநாயகனுடன் கலக்கல் நடனம் ஆடியுள்ளாராம்.

சொட்ட செட்ட நனைந்து
மோனிகா கடைசியாக நடித்த படம் நதிகள் நனைவதில்லை இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் அவர் ஹோம்லியான கெட்டப்பில் நடித்திருந்தபோதும், மழையில் நனைந்தபடி தொப்பலாக நனைந்து கொண்டு ஒரு படாலுக்கு அவர் ஆடியிருக்கிறார்.

மோனிகாவை மறக்க கூடாதில்ல..
ஆக, போகிற போக்கிலும் தன்னை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை நனைத்து விட்டு சென்றுள்ளார் மோனிகா.


Click it and Unblock the Notifications











