»   »  தமிழ்-தெலுங்கு மோனிகா!

தமிழ்-தெலுங்கு மோனிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இம்சை அரசி மோனிகாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

பிரேக் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த மோனிகாவுக்கு, ரிலீஃப் கொடுக்கும்வகையில் வந்தது இம்சை அரசன் 23ம் புலிகேசி.

வாயழகன் வடிவேலுவுடன் ஜோடி போட்டு நடித்த மோனிகா, இம்சை படம்வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் வாயெல்லாம் பல்லாக இருக்கிறார்.

இந்தப் படத்தால் மேலும் பல புதிய படங்களும் மோனியைத் தேடி ஓடோடி, ஓடோடிவந்துள்ளனவாம்.

இப்ப சந்தோஷமாத்தா? என்று மோனியிடம் கேட்டால், ரொம்ப சந்தோஷமாகஇருக்கு. அழகி படத்தில்தான் நான் கவனிக்கப்பட்டேன். அதன் பிறகு சில படங்களில்நடித்துள்ளேன். ஆனால் சரியான பிரேக் கிடைக்கல.

இப்போது இம்சை அரசன் மூலம் நானும் பிரபலமாகியுள்ளேன். புதிதாக சில படங்கள்வந்துள்ளன. தொடக்கம் படத்தில் நான்தான் நாயகி. இதில் மணிவண்ணன் சார்பையன் ரகுவண்ணன் மற்றும் ரிஷி, அபிநய் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.

இன்னொரு ஹீரோயினான மேகா நாயரும் (நாயரோட ஃபோட்டோவைப்புடிங்கப்பா!) இந்தப் படத்தில் இருக்கிறார்.

இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டா என்று நாம் லேசாக இழுத்தபோது, இல்லை,இல்லை, இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால் நான்தான் கதையின் நாயகிஎன்று சப்ஜாடாக சமாளித்தார் மோனிகா.

தமிழ் தவிர தெலுங்கிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம் மோனிகா. இப்போதுகையில் ஒரே ஒரு தெலுங்குப் படம்தான் இருக்கிறதாம். ஆனால் இம்சையின்எதிரொலி தெலுங்கிலும் கேட்டு யாராவது நிச்சயம் தன்னைத் தேடி வருவார்கள் என்றநம்பிக்கையில் உள்ளார் மோனிகா.

இம்சையின் வெற்றியால் மோனிகாவுக்கு ஒரு இம்சை பிறந்துள்ளதாம். ஷூட்டிங்ஸ்பாட்டில் இவரை சந்திக்கும் ரசிகர்கள் இம்சையில் ஆடியதைப் போல் அந்தக் காலஆட்டம் ஒன்றை ஆடச் சொல்லி இம்சிக்கிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil