»   »  டேட்டிங் மோனிகா!

டேட்டிங் மோனிகா!

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசின் நாயகிகளில் ஒருவராக நடித்த மோனிகாவுக்கு புதுப் படங்கள்வந்தவண்ணம் உள்ளதாம். அதில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் டேட்டிங்படம் முழுக்க கிளாமர் தோரணத்தை தூக்கலாக தொங்க விட்டிருக்கிறார்களாம்.

சினனப் பொண்ணாக இருந்த போதே நடிக்க வந்து விட்ட மோனிகா, அழகி படத்தில்தான் கொஞ்சம் கவனிக்கப்பட்டார். அதற்குப் பிறகு சில படஙகளில் நாயகியாக நடிக்கஆரம்பித்தார்.

ஆனால் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில்தான் முழுமையான நாயகியாகஉருவெடுத்தார் மோனிகா. வடிவேலுவுடன் அவர் போட்ட அந்தக்கால டான்ஸுக்குதியேட்டரில் விசிலோடு கைத்தட்டலும் காதைப் பிளக்கிறதாம். இதை சொல்லி செர்லிசந்தோஷப்பட்டுக் கொள்கிறார் மோனிகா.

அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பல புதிய படங்கள் வந்துள்ளதால்பூரிப்பில் ஒரு சுற்று பெருத்துப் போய் விட்டாராம். இப்போது மோனிகா நடிக்ககிளுகிளுப்பான ஒரு படம் கோலிவுட்டில் தயாராகி வருகிறது. படத்திற்குப் பெயரேடேட்டிங்.

படத்தோட கதையை பாதி யோசித்து விட்டிருப்பீர்களே? ரொம்ப சரி.டேட்டிங் போவதைப் பற்றிய படம் தானாம் இது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்,சாப்ட் டிரிங்க், ஹாட் டிரிங்க்ஸ் என எப்போதும் ஜாலியாக இருக்கும் ஒரு இளமைக்கூட்டத்தைப் பறறிய படமாம் இது.

ஆர்.பாலு இயக்குகிறார். இப்படத்தில் மோனிகா படு கிளுகிளுப்பாக நடித்துவருகிறாராம். அவருக்கு ஜோடியாக நடிப்பது அகில் என்ற புதுப்பையன். வெறும்கிளுகிளுப்பு மட்டுமல்லாது, நல்ல செய்தியையும் வைத்துள்ளாராம் பாலு.தினாவின் இசையில் இளமைத்துள்ளலுடன் பாட்டுக்கள் போடப்பட்டுள்ளதாம்.

இதில் இரண்டு பாட்டுக்கள் குத்துப் பாட்டுக்களாம். இளமை பொங்கும் இப்படத்தில்கிளாமரை தூக்கலாக கொடுத்துள்ளார் மோனிகா என்கிறார்கள்.

ஒரு முடிவோடு இருக்கிறார் போல

Read more about: monicas new movie dating
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil