»   »  மோனிகாவின் பார்முலா

மோனிகாவின் பார்முலா

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசி மோனிகா காட்டில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.

இப்போது மணிவண்ணனின் மகன் ரகு ஹீரோவாக அறிமுகமாகும் தொடக்கம் என்றபடத்தல் புக் ஆகியிருக்கிறார். மேலும் டேட்டிங் என்ற படத்திலும், ஒருபெயரிடப்படாத படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் இப்படி ஒரு பக்கம் இழுத்தால் மறுபக்கம் தெலுங்கும் மோனிகாவைமொய்க்கிறது. அங்கு "பைசாலோ பரமாத்மா (பணம் தான் சாமி) என்ற படம் உள்பட3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் நிறைய நடிப்பு, கொஞ்சமே கொஞ்சம் கிளாமர் என்று பார்முலாவைத்திருக்கும் மோனிகா தெலுங்கில் மொத்த கவர்ச்சி, தேவைப்பட்டால் கொஞ்சம்நடிப்பு என்று பக்கவான பிளானுடன் இருக்கிறார்.

குமரியாகி ஹீரோயினான வேகத்தில் கார், வீடு வாங்கிவிட்டார் மோனிகா. நேரம்கிடைக்கும்போதெல்லாம் தனது புதிய காரில் பறக்கிறார்.

3 வயசு குழந்தையாக இருக்கும் போதே சினிமாவுக்கு வந்துவிட்ட மோனிகாவுக்கும்அவரது குடும்பத்தினருக்கும் சினிமாவின் இண்டு, இடுக்கு எல்லாம் அத்துப்படி.

இதனால் மிக லாவகமாக வலை வீசி டபக் டபக் என வாய்ப்புளை பிடித்துப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

கிளாமரா நடிப்பேன். ஆனால், அதில் "வல்காரிட்டி இல்லாமல் பார்த்துக்குவேன்என்று சொல்லும் மோனிகா நல்ல நிறுவனமா, இயக்குனர் யார், நம்மள எப்படிநடத்துவாங்க என்று பார்த்த பிறகு தான் நடிக்க சம்மதிக்கிறேன் என்கிறார்.

மோனிகாவுக்கு இதுவரை பாய் பிரண்ட் யாரும் இல்லையாம். ஸ்கூலில் உடன் படித்தஅனிஷா, செளம்யா ஆகியோர் தான் இவருக்கு மிக நெருக்கமான தோழிகளாம்.இதனால் மோனிகாவோடு காரில் பறக்கையில் அதில் இந்த இருவரையும் பார்க்கமுடிகிறது.

சமீபத்தில் மோனிகா எடுத்திருக்கும் முக்கியமான முடிவு. இனி செகண்ட்ஹீரோயினாக நடிப்பதில்லை என்பது. இனி ஒன்ல் ஹீரோயின் ரோல்ஸ் தானாம். அதேபோல டிவி பக்கம் இப்போதைக்கு வரவே மாட்டாராம்.

சான்ஸ் இல்லாம உட்கார்ந்தா பார்த்துக்குவோம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil