அழகி மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறினார்... இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்!

By Shankar

சென்னை: பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மோனிகா, அழகி, சிலந்தி உள்பட ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தார். சிலந்தியில் அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

சந்திப்பு

சந்திப்பு

இடையில் தமிழ்ப் படங்களில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இன்று திடீரென செய்தியாளர்களை ஆர்கேவி ஸ்டுடியோவில் சந்தித்தார் மோனிகா.

பேட்டி

பேட்டி

அவர் கூறுகையில், "குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன்.

அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

பணத்துக்காக அல்ல

பணத்துக்காக அல்ல

பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன்.

திருமணம்

திருமணம்

எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன் . எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்

புதிய பெயர்

புதிய பெயர்

பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் இப்போது என் பெயர் 'எம் ஜி ரஹீமா'. அதாவது மாருதி ராஜ் கிரேஸி ரஹீமா (அம்மா அப்பா பெயருடன் புதிய பெயர்).

நடிக்க மாட்டேன்

நடிக்க மாட்டேன்

மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X