மோனிகாவோட பேரு மாறிப் போயி...!

By Sudha

சென்னை: நடிகை மோனிகா தனது பெயரை பாவனா என்று மாற்றி விட்டார் - மலையாள சினிமாவில் நடிப்பதற்காக.

அகிலமெங்கும் அறியப்பட்ட அழகு

அகிலமெங்கும் அறியப்பட்ட அழகு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும் அழகி படம் மூலம் கதாநாயகியாக அகிலமெங்கும் அறியப்பட்ட அழகான நடிகை மோனிகா.

கதைதான் முக்கியமாம்

கதைதான் முக்கியமாம்

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் மலேசியத் தமிழ்ப்படங்கள் என்று நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் மோனிகா.

916 மலையாளம்

916 மலையாளம்

மோனிகா நடித்து வெளிவந்திருக்கும் 916 என்ற மலையாளப் படம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பினைப் பெற்றிருக்கிறதாம்.

அது என்ன 916?

அது என்ன 916?

916 என்றாலே தரமான தங்கம்தான் நம் நினைவுக்கு வரும். அதனைப் பெயராக வைத்திருக்கிறார்களே அப்படி என்ன விசேஷம் என்று மோனிகாவிடம் கேட்டால், 916 படமும் ஒரு தரமான படம் தான். கதைபறையும் போல், மணிக்காகளல் ஆகிய படங்களை இயக்கிய மோகனன் இயக்கியிருக்கும் படம் தான் 916. மோகனன் அவரது முந்தைய இரண்டு படங்களுக்குமே மாநில விருதுகளை வாங்கியவர். அவரது படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி

சரி உங்க பாத்திரம் என்னவோ...?

சரி உங்க பாத்திரம் என்னவோ...?

நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடெண்ட் ஆக நடித்திருக்கிறேன். எனக்கு ஜோடி அனுப் மேனன். ஆசிஃப் இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கிறார். மற்றும் முகேஷ், மீரா வாசுதேவன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தமிழகத்திலும் வருகிறது

தமிழகத்திலும் வருகிறது

இரண்டு அழகான குடும்பங்களின் வாழ்க்கையினைச் சுவராஸ்யமாகச் சொல்லும் படம்தான் 916. தியேட்டர்களில் சென்று பாருங்கள் தமிழகத்திலும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகவிருக்கிறது.

நிரந்தரமாக நிற்க ஆசை

நிரந்தரமாக நிற்க ஆசை

ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதல்ல. சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தாலே போதும். எனக்கு ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்க ஆசை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் மோனிகா.

முக்கியமான விஷயம், பேரு மாறிப் போச்சு

முக்கியமான விஷயம், பேரு மாறிப் போச்சு

அப்புறண் இன்னொரு முக்கியமான விஷயம். மோனிகா தனது பெயரை பாவனா என்று மாற்றி விட்டாராம். அதாவது மலையாளத்தில் மட்டும் பாவனாவாம், தமிழில் மோனிகாதானாம்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X