»   »  மோனிகாவின் இம்சை... ஷங்கர் தயாரிக்க வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் இம்சை அரசியாக, அதாவது வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகி படத்தில் வந்த மோனிகா.ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிம்புதேவன் என்பவர் இயக்குகிறார். இவர்இயக்குனர் சேரனிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர்.28 ஆண்டுகளுக்கு முன் மாஜி முதல்வர் எம்ஜிஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தான் தமிழில் வெளியான அரசர்காலத்து கடைசிப் படம். அதன் பின்னர் சில பக்திப் படங்கள் அரசர் காலத்து பின்னணியில் வைத்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முழு நீள அரசப் படம் இது தானாம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க மோனிகாவை புக் செய்துவிட்டார்கள். தமிழில் அவ்வளவாக எடுபடாத இந்த மலையாளத்து சின்ன சேச்சி, தெலுங்கிலும் கன்னடத்திலும் தன்னால் முடிந்த கவர்ச்சியைக் காட்டி வருகிறார். இதனால் அங்கு ஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இவரது சம்பளம் ரூ. 50,000 தான் என்பதால் தெலுங்கில் பெரும்பாலான படங்களில் இவர் தான் ஹீரோயினுக்கு தோழி அல்லது அக்கா, தங்கச்சி. இல்லாவிட்டால் செகண்ட் லெவல் ஹீரோ யாருடனாவது டூயட் பாடிக் கொண்டிருப்பார். இப்படியாப்பட்டவர் தமிழில் லவ் சேனல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துப் பார்த்தார். ஆனால் அது ஓடவில்லை. இந் நிலையில் ஷங்கர் கூப்பிட்டு வடிவேலுக்கு ஜோடி என்றதும் முதலில் தயங்கினாராம். அப்புறம் ஒப்புக் கொண்டாராம். இவர் தவிர நந்திதாவும் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ராஜா காலத்துப் படம் என்பதால் ஏவிஎம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் பிரமாண்டமான செட்டுகளைப் போட்டு படத்தை எடுத்து வருகிறார்கள்.

மோனிகாவின் இம்சை... ஷங்கர் தயாரிக்க வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் இம்சை அரசியாக, அதாவது வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகி படத்தில் வந்த மோனிகா.ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிம்புதேவன் என்பவர் இயக்குகிறார். இவர்இயக்குனர் சேரனிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர்.28 ஆண்டுகளுக்கு முன் மாஜி முதல்வர் எம்ஜிஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தான் தமிழில் வெளியான அரசர்காலத்து கடைசிப் படம். அதன் பின்னர் சில பக்திப் படங்கள் அரசர் காலத்து பின்னணியில் வைத்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முழு நீள அரசப் படம் இது தானாம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க மோனிகாவை புக் செய்துவிட்டார்கள். தமிழில் அவ்வளவாக எடுபடாத இந்த மலையாளத்து சின்ன சேச்சி, தெலுங்கிலும் கன்னடத்திலும் தன்னால் முடிந்த கவர்ச்சியைக் காட்டி வருகிறார். இதனால் அங்கு ஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இவரது சம்பளம் ரூ. 50,000 தான் என்பதால் தெலுங்கில் பெரும்பாலான படங்களில் இவர் தான் ஹீரோயினுக்கு தோழி அல்லது அக்கா, தங்கச்சி. இல்லாவிட்டால் செகண்ட் லெவல் ஹீரோ யாருடனாவது டூயட் பாடிக் கொண்டிருப்பார். இப்படியாப்பட்டவர் தமிழில் லவ் சேனல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துப் பார்த்தார். ஆனால் அது ஓடவில்லை. இந் நிலையில் ஷங்கர் கூப்பிட்டு வடிவேலுக்கு ஜோடி என்றதும் முதலில் தயங்கினாராம். அப்புறம் ஒப்புக் கொண்டாராம். இவர் தவிர நந்திதாவும் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ராஜா காலத்துப் படம் என்பதால் ஏவிஎம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் பிரமாண்டமான செட்டுகளைப் போட்டு படத்தை எடுத்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil
ஷங்கர் தயாரிக்க வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் இம்சை அரசியாக, அதாவது வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகி படத்தில் வந்த மோனிகா.

ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிம்புதேவன் என்பவர் இயக்குகிறார். இவர்இயக்குனர் சேரனிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர்.

28 ஆண்டுகளுக்கு முன் மாஜி முதல்வர் எம்ஜிஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தான் தமிழில் வெளியான அரசர்காலத்து கடைசிப் படம்.

அதன் பின்னர் சில பக்திப் படங்கள் அரசர் காலத்து பின்னணியில் வைத்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முழு நீள அரசப் படம் இது தானாம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க மோனிகாவை புக் செய்துவிட்டார்கள்.

தமிழில் அவ்வளவாக எடுபடாத இந்த மலையாளத்து சின்ன சேச்சி, தெலுங்கிலும் கன்னடத்திலும் தன்னால் முடிந்த கவர்ச்சியைக் காட்டி வருகிறார். இதனால் அங்கு ஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

இவரது சம்பளம் ரூ. 50,000 தான் என்பதால் தெலுங்கில் பெரும்பாலான படங்களில் இவர் தான் ஹீரோயினுக்கு தோழி அல்லது அக்கா, தங்கச்சி. இல்லாவிட்டால் செகண்ட் லெவல் ஹீரோ யாருடனாவது டூயட் பாடிக் கொண்டிருப்பார்.

இப்படியாப்பட்டவர் தமிழில் லவ் சேனல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துப் பார்த்தார். ஆனால் அது ஓடவில்லை.

இந் நிலையில் ஷங்கர் கூப்பிட்டு வடிவேலுக்கு ஜோடி என்றதும் முதலில் தயங்கினாராம். அப்புறம் ஒப்புக் கொண்டாராம். இவர் தவிர நந்திதாவும் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ராஜா காலத்துப் படம் என்பதால் ஏவிஎம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் பிரமாண்டமான செட்டுகளைப் போட்டு படத்தை எடுத்து வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil