ஜனநாயகன் படம் பற்றிய செம அப்டேட்.. விஜய் பண்ண அந்த விஷயம்.. நெகிழ்ந்து போன இளம் நடிகை ஓபன் டாக்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்த வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை மோனிஷா பிளெஸி சமீபத்தில் வெளியான சுழல் 2 வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.

விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜனநாயகன் படம் பற்றியும் நடிகர் விஜய் தன்னுடன் நடந்து கொண்ட விதத்தை பற்றியும் கூறியுள்ளார்.

Monisha Blessy opens up about Vijay s sweet gesture and Jana Nayagan update

நடிகை மோனிஷா பிளெஸியின் பேட்டி விஜய் ரசிகர்களை ரொம்பவே ஹேப்பியாக்கி உள்ளது. இளம் நடிகைகள் அனைவருமே தளபதியின் ஃபேன் தான் என்றும் கொண்டாடி வருகின்றனர்.

இளம் நடிகைகளின் ஃபேவரைட்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அரசியலுக்கு செல்வதே பலருக்கும் மனதளவில் விருப்பம் இல்லை என்றாலும், அவர் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நல்லாட்சி நடக்கும். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வார் என்று கருதுகின்றனர். சினிமா வட்டாரத்தில் முன்பெல்லாம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் அப்போது உள்ள இளம் நடிகைகள் அஜித்தின் பெயரை தான் ஹேண்ட்ஸம் ஹீரோ என சொல்வார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல இளம் நடிகைகள் தளபதி விஜய் தான் தங்களின் பேவரைட் என்று கூறி வருகின்றனர். சமீபத்தில் டிராகன் படத்தின் மூலம் சென்சேஷனலாக மாறியுள்ள கயாடு லோஹர் சமீபத்தில் விஜய் தான் க்ரஷ் எனக்கூறியிருந்தார். மமிதா பைஜூவை தொடர்ந்து ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் இன்னொரு இளம் நடிகையான மோனிஷா பிளெஸ்சிக்கும் விஜய் தான் ஃபேவரைட்டாம்.

விஜய் என்ன பண்ணாரு தெரியுமா?: ஜனநாயகன் படத்தின் பூஜைக்கு என்னை அழைப்பார்கள் என்று நினைக்கவில்லை. அதிலும், நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். முதல் வரிசையில் இருந்த பலருக்கும் வணக்கம் வைத்து வரவேற்ற நடிகர் விஜய் அப்படியே யுடர்ன் அடித்து சென்று விடுவார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசி ரோ வரை வந்து எனக்கும் அவர் கைகொடுத்து வரவேற்றதை பார்த்து ஷாக் ஆகிவிட்டேன் என்றார்.

பேசவே முடியல: எந்தவொரு ரியாக்ஷனும் வராமல் அப்படியே பேச முடியாமல் பிளாங்க் ஆகி விட்டேன். தளபதி விஜய் படத்தில் நாம் இருக்கிறோம் என்பதே பெரிய விஷயம். அதிலும் முதல் நாளே அவர் நம்மை சந்தித்து கை கொடுத்துள்ளார் என வேறு ஒரு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என கூறியுள்ளார்.

ஜனநாயகன் படம் பற்றி: எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் ஜாவா பைக்கில் விஜய் மமிதா பைஜுவை பின்னாடி அமர வைத்து ஸ்கிட் அடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜனநாயகன் படம் பற்றி மோனிஷாவிடம் கேட்டதற்கு, அவர் படம் பற்றியெல்லாம் கேட்காதீங்க, ஆனால், சூப்பராக ரெடியாகிட்டு இருக்கு, ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெயிட்டிங் எனக் கூறி விஜய் ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X