»   »  தலைதூக்கும் ஹீரோயின்கள் ஆதிக்கம்… ஹீரோக்கள் கலக்கம்?

தலைதூக்கும் ஹீரோயின்கள் ஆதிக்கம்… ஹீரோக்கள் கலக்கம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அதிசயங்கள் நடக்கும். அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது தான் குறும்பட இயக்குநர்களின் வரவு. இப்போது வரை அது நீடிக்கிறது. அப்ப்டியே சத்தமின்றி இன்னொரு மாற்றத்துக்கு தயாராகி விட்டது தமிழ் சினிமா. அது ஹீரோயின்கள் ஆதிக்கம்...

ஹீரோயின்கள் என்றாலே அது கிளாமருக்கும் காதலிக்கவும் மட்டும் தான் என்று அவர்களுக்கான கேரக்டர்களுக்கு அதிகம் மெனக்கெட்டதில்லை தமிழ் சினிமா இயக்குநர்கள். ஊறுகாயாய் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீரோயின்கள் இப்போது விஸ்வரூபம் எடுத்து லீட் ரோல்களில் நடிக்க தொடங்கியிருக்கின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா

இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன். இவர் லீட் ரோலில் நடித்த மாயா படம் ஹிட் ஆனதால் இப்போது கையில் நான்கு லீட் ரோல் படங்கள். இந்த நான்கிலுமே நயன் தாராவுக்கு ஜோடியே கிடையாது.

த்ரிஷா

த்ரிஷா

நாயகி மூலம் லீட் ரோலுக்கு ஸ்டெப் எடுத்து வைத்தவர் அது ஓடாததால் யோசித்தார். ஆனாலும் சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமிக்கு இணையான ரோல். அது மட்டுமல்லாமல் மோகினி மற்றும் இன்னொரு பெயரிடப்படாத படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

ஜோதிகா

ஜோதிகா

நயனுக்கு முன்பே 36 வயதினிலே மூலம் ஹீரோயின் ஓரியண்டட் படங்களுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டார் ஜோதிகா. மகளிர் மட்டும் படத்தில் பிரம்மா இயக்கத்தில் நடிப்பவர் அடுத்தும் ஒரு லீட் ரோலுக்கு தயாராகி விட்டார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

கபாலிக்கு பிறகு படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருந்த ராதிகா ஆப்தே இப்போது மிஷ்கினின் உதவியாளர் ஆதித்யா இயக்கும் ஒரு படத்தில் லீட் ரோலில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

சில காலமாக பட வாய்ப்பில்லாமல் சும்மா இருந்த ஸ்ரேயாவிடம் லீட் ரோலில் நடிக்க கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் மித்ரன் ஜவஹர்.
இந்த படங்களில் பாதியாவது ஓடினால் ன் ஹீரோயின்களின் தனி ஆவர்த்தனம் தொடரும்... அது ரசிகர்கள் கைகளில் இருக்கிறது.

English summary
Nowadays most of the top heroines wanted to act in heroine oriented movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil