அன்னையர் தினம்: கோலிவுட்டின் அழகிய அம்மாக்கள்

By Siva

சென்னை: அன்னையர் தினமான இன்று கோலிவுட்டின் அழகிய அம்மாக்கள் பற்றி பார்ப்போம்.

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. நடமாடும் தெய்வம் என்று அழைக்கப்படுபவள் தாய். தன்னை பற்றி யோசிக்காமல் குழந்தைகளுக்காகவே வாழ்பவள் தாய்.

அத்தகைய தாயை பெருமைப்படுத்தும் அன்னையர் தினமான இன்று கோலிவுட்டில் உள்ள அழகிய அம்மாக்களை பார்ப்போம்.

ராதிகா

ராதிகா

ராதிகா சரத்குமார் ரயான், ராகுல் என்ற 2 குழந்தைகளுக்கு தாய். அவர் வீட்டையும் கவனித்துக் கொண்டு படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

குஷ்பு

குஷ்பு

நடிகை குஷ்பு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய். அவர் அரசியல், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருந்தாலும் குழந்தைகளுக்கு என்று நேரம் ஒதுக்க தவறியது இல்லை.

சிம்ரன்

சிம்ரன்

இரண்டு மகன்களுக்கு தாயான சிம்ரன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது தவிர அவர் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜோதிகா

ஜோதிகா

பல ஆண்டுகளாக ஹீரோயினாக இருந்த ஜோதிகா திருமணம் முடிந்த கையோடு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2 குழந்தைகளுக்கு தாயான அவர் அவர்களுக்காக படங்களில் நடிக்காமல் உள்ளார்.

ஷாலினி

ஷாலினி

ஷாலினி அஜீத் குமாரை மணந்து அனௌஷ்கா என்ற குழந்தைக்கு தாயாக உள்ளார். சினிமாவுக்கு முழுக்கு போட்ட அவர் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

தேவயானி

தேவயானி

கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்த தேவயானி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய். அவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நதியா

நதியா

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நதியா 2 பெண் குழந்தைகளை பெற்ற பிறகு நடிக்க வந்துள்ளார். ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்கும் அவர் பார்ப்பதற்கு அக்கா போன்று தான் உள்ளார்.

ரோஜா

ரோஜா

நடிகை ரோஜா தற்போது ஆந்திராவில் அரசியலில் படுபிசியாக உள்ளார். இருப்பினும் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட தவறுவது இல்லை.

சரண்யா

சரண்யா

கோலிவுட்டில் அம்மா கதாபாத்திரம் என்றால் கூப்பிடு சரண்யாவை என்று சொல்லும் அளவுக்கு அவர் நடிப்பில் வெளுத்துக் கட்டுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X