குளியலறையில் விழுந்த அம்மா படுகாயம்.. லாக்டவுனால் வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை தவிப்பு!
மும்பை: லாக்டவுனால் துபாயில் சிக்கிக்கொண்ட நடிகை, காயமடைந்துள்ள தனது அம்மாவை பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாகினி சீரியலில் நடித்தவர் மெளனி ராய். இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர், அக்ஷய் குமாரின் கோல்டு படத்தில் நடித்த இவர், யஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

நாகார்ஜுனா
அடுத்து, மேட் இன் சைனா படத்தில் நடித்த இவர், இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா உட்பட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஹீரோ படமான இதை அயன் முகர்ஜி இயக்குகிறார்.

ஷூட்டிங் தடை
'மொகுல்' படத்தில் ஆமிர்கான் ஹீரோவாக நடிக்கிறார். மெளனி ராய் ஹீரோயினாக நடிக்கிறார். குல்சன் குரோவர், திவ்யா தத்தா, ஃபைசன் கான் உட்பட பலர் நடிக்கின்றனர். சுபாஷ் கபூர் இயக்குகிறார். டி.சீரிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆமிர்கானும் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

பாதிப்பு
இதற்கிடையே கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இதன் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் எண்ணிக்கை
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இந்தியாவில் 13,387 ஆகவும், பலி எண்ணிக்கை 437 ஆகவும் உயர்ந்துள்ளது. 11,201 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 1,748 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவுதான் என்றாலும் நாளுக்கு நாள், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சனா சையத்
இதற்கிடையே, சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட பலர் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர். இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. இந்தி நடிகை சனா சையத், அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவரது தந்தை மும்பையில் மரணமடைந்த போதும் அவரால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை.

வழுக்கி விழுந்தார்
இப்போது நடிகை மெளனி ராய், துபாயில் சிக்கி இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றுக்காக அங்கு சென்ற அவரும் அவரது சகோதரியும், விமானங்கள் ரத்து காரணமாக, இந்தியா திரும்ப முடியவில்லை. இந்நிலையில் மெளனி ராயின் அம்மா, குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரால் மும்பை திரும்பி வர முடியவில்லை என்று மெளனி ராய் கவலையுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











