இவளுக்கு வந்த வாழ்வை பாரேன், என்ன மாயமந்திரம் பண்ணாளோ: நாகினியை பார்த்து நடிகைகள் பொறாமை
மும்பை: நாகினி சீரியல் மூலம் பிரபலமான மவுனி ராயை பார்த்து பல பாலிவுட் நடிகைகள் பொறாமைப்படுகிறார்கள்.
நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் மவுனி ராய். டப்பிங் செய்யப்பட்ட சீரியல் என்றாலும் தமிழகத்திலும் நாகினி வெற்றி பெற்றது.
மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மவுனி ராய்
மவுனி ராய் சல்மான் கானுக்கு பிடித்த நடிகையாகிவிட்டார். இதையடுத்து சல்மான் அவரை பாலிவுட் இயக்குனர்களுக்கு பரிந்துரை செய்து வருகிறார்.

அக்ஷய் குமார்
அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் மவுனி ராய். இந்த படத்தில் மவுனி ராய்க்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

சோனாக்ஷி
சல்மான் கான் தபாங் 3 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா இருக்கிறார். அவர் போக மவுனி ராயும் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சல்மானின் பரிந்துரையால் மவுனி இந்த படத்தில் நடிக்கிறாராம்.

பொறாமை
முதல் படத்தில் அக்ஷய் குமார், இரண்டாவது படத்தில் சல்மான் கான் என்று பெரிய நடிகர்களுடன் ஜோடி சேரும் மவுனி ராயை பார்த்து பிற பாலிவுட் நடிகைகள் பொறாமைப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











