விவாகரத்துக்குப் பிறகு சமந்தா மாதிரியே ஐட்டம் டான்ஸ் ஆடிய நாகினி நடிகை.. இனிமே இப்படித்தானா?

மும்பை: கோவாவில் தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நாகினி நடிகை மெளனி ராய் சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்து பிரியப் போவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லெஸ்பியன் உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் மெளனி ராய் சிக்கினாலும் நேற்று வெளியான வருண் தவானின் 'Hai Jawani Toh Ishq Hona Hai' படத்தில் வருண் தவானுக்கு அம்மாவாக நடித்திருந்தார். வயது வித்தியாச சர்ச்சைகள் ஒரு பக்கம் வெடித்தாலும், படம் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை என ரசிகர்கள் கழுவி ஊற்றிவிட்டனர்.

Mouni Roy done item song after Divorce controversy sparks like Samantha

இந்நிலையில், புதிய படத்தில் ஷாம்மோ என ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ள போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் மெளனி ராய்.

நாகினி சீரியல் மூலம் பிரபலம்: சன் டிவியில் முதன் முறையாக நாகினி சீரியல் தமிழ் டப்பிங்கில் வெளியான நிலையில், ஷிவானி கதாபாத்திரத்தில் நடித்த மெளனி ராயை கோலிவுட் ரசிகர்களும் டிவி முன்பாக அமர்ந்து பார்த்து ரசிக்கத் தொடங்கினர். நாகினி சீரியல் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் ரஸ்டம், பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் மெளனி ராய். திஷா பதானியுடன் நட்பாக பழகி வந்த இவர் 2022ம் ஆண்டு சுராஜ் நம்பியார் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்புக் காரணமாக பிரிந்து விட்டனர்.

சமந்தா பாணியில்: நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், சமந்தாவுக்கு டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்தில் "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு முதன்முதலாக ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். அந்த பாடலுக்காக சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதே போல விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நாகினி நடிகை மெளனி ராயும் ஒரு ஐட்டம் பாடலில் நடனமாடியுள்ளார்.

ஐட்டம் பாடலில் ஓவர் கவர்ச்சி: நடிகை மெளனி ராய் ஏற்கனவே கேஜிஎஃப் உள்ளிட்ட சில படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில், புதிதாக ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய சந்தோஷத்தை ஏகப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ஷேர் செய்து பதிவிட்டுள்ளார் மெளனி ராய். அவருக்கு லைக்குகள் மற்றும் ஃபயர் எமோஜிக்கள் குவிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X