ஆபாசமான சைகை.. மேடையில் நடந்த அசிங்கம்.. மனதளவில் பாதித்தேன்.. மௌனி ராய் வேதனை!

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் இந்தி தொலைக்காட்சி தொடர்கள் வெற்றி நடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளத்துடன் வலம் வந்த சீரியல் நாகினி. இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வரும் மௌனி ராய், திருமண நிகழ்ச்சியில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார்.

நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அந்த சீரியல் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த சீரியலில் கண்ணை பறிக்கும் அழகான புடவைகளுடன், அழகு தேவதையாக வலம் வந்தவர் மௌரி ராய். ஒரே ஒரு சீரியல் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவர், கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Mouni Roy instagram

நடிகை நாகினி மௌனி ராய்: பாலிவுட்டில், டோலிவுட் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராமில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், நிகழ்ச்சி சென்றதுமே, சில வயதான நபர்கள் போட்டோ எடுக்கும் சாக்கில் என் இடுப்பில் வைத்தனர். "சார், கையை எடுங்க" என்று மரியாதையுடன் சொன்னோன் அப்போதும் அவர்கள் கேட்கவில்லை. பின் நான் மேடைக்கு சென்ற போது, மேடைக்கு முன்னால் நின்றிருந்த முதியவர்கள் ஆபாசமான சைகைகளை காட்டி கிண்டல் செய்து, ரோஜா பூக்களை என் மீது வீசினார்கள்.

ஆபாசமான சைகை: மேடை உயரமாக இருந்ததால், அந்த நபர்கள் மேடைக்கு கீழிருந்து தவறான கோணத்தில் வீடியோ எடுத்தனர். இதை திருமண நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளரும் தட்டிக்கேட்கவில்லை, அவர்களின் உறவினர்களும் கண்டிக்கவில்லை. தனக்கே இந்த நிலை என்றால், திரைத்துறைக்கு வரும் புதிய பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு கேள்விக்குறியாக இருக்கும் என்பதை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவது வெட்கக்கேடானது என்று மௌனி ராய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X