காட்டுக்குள் மரத்தில் ஏறி மல்லாக்கப்படுத்தபடி.. வைரலாகும் பிரபல நடிகையின் கொள்ளை அழகு போட்டோஸ்!

By

மும்பை: பிரபல நடிகை மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள கொள்ளை அழகு போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

மாலத்தீவில் இருக்கிறார் நடிகை மெளனி ராய். கொரோனா காலத்திலும் ஷூட்டிங் பிசியில் இருந்தவர், இப்போது ஜாலியாக பொழுதை கழித்துவருகிறார்.

கூடவே அவர் சகோதரியும் இருக்கிறார். அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

செஃபி வீடியோ

செஃபி வீடியோ

அவர் வெளியிடும் பிகினி உள்ளிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். ரசிகர்கள், லைக்ஸ்களாலும் கமென்ட்களாலும் கொண்டாடித் தீர்க்கின்றனர். பிகினி உடையில், ஒரு கையில் தேங்காயை பிடித்தபடி அவர் வெளியிட்டிருந்த செஃபி வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது.

எக்கச்சக்க ரசிகர்கள்

எக்கச்சக்க ரசிகர்கள்

நடிகை மெளனி ராய், 'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றவர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்தி நடிகையான இவர், ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா சூப்பர் ஹீரோ கதையை கொண்டது. இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார் மெளனி ராய். படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். கடைசியாக அவர் நடித்த, லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

பழைய கதை

பழைய கதை

லாக்டவுனுக்கு முன் போட்டோஷூட்டுக்காக அவர் அபுதாபி சென்றதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் அங்கு சிக்கிக் கொண்டதும் பிறகு லண்டனுக்கு விளம்பர ஷூட்டிங்கிற்கு சென்றதும் பழைய கதை. சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவருக்கு, இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள் இருக்கிறார்கள்.

மல்லாக்கப் படுத்தபடி

மல்லாக்கப் படுத்தபடி

அவர் இப்போது மாலத்தீவு காட்டுக்குள், மரங்களின் மீது மல்லாக்கப் படுத்தபடியும் அமர்ந்தபடியும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. புகைப்படங்களில் தெரியும் அந்த மரங்களும் அதற்கு பின் உள்ள மர வீடும், அவருடைய அள்ளும் அழகு உடைகளும் மிரட்டுகின்றன.

வனதேவதை மாதிரி

வனதேவதை மாதிரி

ஆஹா, கண்ணை திருப்பவே முடியலை, அவ்வளவு அழகு என்று பலர் கூறியுள்ளனர். சிலர் நீங்கள் பெண்ணா, தேவதையா என்று கேட்டுள்ளனர். ஏன் இவ்வளவு அழகா இருக்கீங்க என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர். வனதேவதை மாதிரி தெரியறீங்க என்று சிலர் தெரிவித்துள்ளனர். பலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X